ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் (UNDP) இணைப்பாக்கத்துடனும் முகாமைத்துவ உதவியுடனும் 2002ஆம் ஆண்டு இலங்கையின் தேசிய கண்ணிவெடி அகற்றல் செயற்பாட்டு மையம் ஸ்தாபிக்கப்பட்டது. 2010ம் ஆண்டு இலங்கையின் அமைச்சரவை NMACஇனை ஸ்தாபிப்பதை உத்தியோகபூர்வமாக அங்கீகரித்ததன் விளைவாக இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் முழுமையான தேசிய உரித்து UNDPஇன் முகாமைத்துவத்திலிருந்து மாற்றப்பட்டது. அன்றிலிருந்து NMAC பல்வேறு அமைச்சுகளின் கீழ் செயற்பட்டு தற்பொழுது நகர அபிவிருத்தி, நிர்மாணம் மற்றும் வீடமைப்பு அமைச்சின் மீள் குடியேற்ற பிரிவில் இயங்குகிறது. தற்பொழுது NMACஇன் பணிப்பாளராக வீடமைப்பு அமைச்சின் மீள் குடியேற்ற பிரிவின் செயலாளர் செயலாற்றுகின்றார்.