பரிந்துரை
1990 ஆம் ஆண்டின் பிற்பகுதியிலிருந்து, கண்ணிவெடிகளை தடை செய்வதற்கான இலங்கை பிரச்சாரமானது (SLCBL), ஆட்களுக்கு எதிரான கண்ணிவெடித் தடைச் சட்டம் (APMBC), கொத்தணிக் குண்டுகள் பற்றிய சமவாயம் (CCM), சில மரபு ரீதியான ஆயுதங்கள் பற்றிய சமவாயம் (CCW), இயலாமையுடன் கூடிய ஆட்களது உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சமவாயம் (UNCRPD தொடர்பான இலங்கையின் இணக்கம் மற்றும் ஏற்றுக் கொள்ளுதல் ஆகியவற்றுக்கான பரிந்துரைகளை மேற்கொண்டு வருகின்றது.
"யுத்தத்திற்கு பின்னர் இலங்கையில் ஆட்களுக்கு எதிரான கண்ணிவெடிகளை இலங்கை ஏன் தடை செய்தல் வேண்டும்". "யுத்தத்திற்கு பின்னரான இலங்கையில் கொத்தணிக் குண்டுகளை ஏன் தடை செய்தல் வேண்டும்”. “யுத்தத்திற்கு பின்னரான இலங்கையானது இயலாமையுடன் கூடிய ஆட்களது உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சமவாயத்தை ஏன் ஏற்றுக் கொள்ளல் வேண்டும்" தொடர்பில் 2015 ஆம் ஆண்டில் SLCBL மூன்று பிரசுரங்களை வெளியிட்டது. சமவாயத்தின் உடன்படிக்கை பத்திரத்துடன் இந்த மூன்று வெளியீடுகளும் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியிடப்பட்டன. இந்த பிரசுரங்களானது சனாதிபதி, பிரதம அமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்க அதிகாரிகள், ஊடகம், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் ஆர்வமுடைய நபர்கள் ஆகியோருக்கு சமர்ப்பிக்கப்பட்டது.
மேலதிக தாமதங்கள் இன்றி APMBC மற்றும் CCM ஆகியன தொடர்பான இலங்கையின் இணக்கத்தை கோரி இலங்கை சனாதிபதி அவர்களுக்கு 2016 ஆம் ஆண்டில் SLCBL ஆனது மனுவொன்றை சமர்ப்பித்தது. முன்னாள் சிரேஷ்ட இராஜதந்திரிகள், முன்னாள் சிரேஷ்ட அரசாங்க அதிகாரிகள், கல்வியியலாளர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், தொழில்வாண்மைமிக்கவர்கள், கூட்டுறவுத் துறை உறுப்பினர்கள், ஆர்வமுடைய ஏனைய தரப்பினர்கள் உள்ளடங்கலாக 131 பேர்கள் இம்மனுவில் கையொப்பமிட்டு அதனை அங்கீகரித்தனர்.
2019 இல் CCM இற்கான அரச காப்புகளின் 9 ஆவது கூட்டத்திற்கு இலங்கை தலைமை தாங்கியது. CCM இன் 9 ஆவது MSP இற்கு இலங்கை தலைமை வகித்த காலப் பகுதியினுள், நாட்டிற்கு சர்வதேச அங்கீகாரம் கிடைக்கப் பெற்றதுடன், சர்வதேச மனிதாபிமான ஆயுதம் களைதல் சமூகத்தினால் இலங்கை பாராட்டப்பட்டது. இலங்கை போன்ற தெற்கு ஆசிய நாடொன்று முதன் முதலில் 9 ஆவது MSP இல் CCM இன் தலைமைப் பதவிக்கு வந்தது. CCM இன் 9 ஆவது MSP இற்கு இலங்கை தலைமைப் பதவி வகிப்பதற்கான பரிந்துரைகளை SLCBL மேற்கொண்டது. சுவிட்சர்லாந்து ஜெனீவாவில் CCM இல் இலங்கை தலைமைப் பதவி வகித்த காலப் பகுதியில் SLCBL முக்கிய வகிபாகத்தை வகித்தது.
2018 மார்ச் இல், APMBC. HRH இன் விசேட தூதுவராக இளவரசர் மிராட் ராட் ஸைட் அல்-ஹுஸைன் இலங்கைக்கு விஜயம் செய்தார். சமவாயத்தின் 163 ஆவது அரச தரப்பாக இலங்கை வந்தமை தொடர்பில் இலங்கைக்கு HRH தனது வாழ்த்துக்களை தெரிவித்து (சமவாயத்தின் 20 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு) இலங்கையின் தற்போது நடைபெற்று வருகின்ற தேசிய கண்ணிவெடி அகற்றல் நிகழ்ச்சித்திட்டத்திற்கு பாராட்டுதலை தெரிவித்தார். HRH இளவரசர் மிராட் அவர்களது இலங்கை விஜயமானது இலங்கைக்கு மாத்திரம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததல்ல. ஒட்டுமொத்த தெற்கு ஆசிய பிராந்தியத்திற்கும் இதுவோர் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகும். ஏனெனில் இப்பிராந்தியத்திற்கு முதல் முறையாக APMBC இன் விசேட தூதுவர் HRH இளவரசர் மிராட் அவர்களது விஜயமானது 2018 மார்ச் 4 முதல் 7 ஆம் திகதி வரை இடம்பெற்ற பொழுது இலங்கை அரசாங்கத்திற்கு ஒருங்கிணைப்பு தொடர்பான உதவிகளை SLCB வழங்கியது.
2027 ஆம் ஆண்டில் இலங்கை தனது கண்ணிவெடி அகற்றல் செயற்பாடுகளை பூரணப்படுத்துவதற்கு முன்னர் APMBC இற்கு MSP இன் தலைவராக இலங்கை வருவதனை SLCBL உற்சாகப்படுத்துகின்றது. (தேசிய கண்ணிவெடி அகற்றல் உபாயமுறையில் குறிப்பிடப்பட்டதன் பிரகாரம்).
யுத்தத்தின் வெடிபொருள் எச்சங்கள் தொடர்பான CCW ஒழுங்குமரபு 5 ஐ ஏற்றுக் கொள்ளுதல் மற்றும் CCM மற்றும் UNCRPD ஆகியவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை பாராளுமன்றம் மூலமாக தேசிய சட்டங்களை நிறைவேற்றுவது தொடர்பிலான பரிந்துரைகளை தொடர்ந்தும் SLCBL மேற்கொண்டு வருகின்றது (இதனை ஏற்றுக் கொண்டதன் பின்னர் உள்ளுார் சட்டங்கள் நிறைவேற்றப்படல் வேண்டும்). 2022 ஆம் ஆண்டில் APMBC நடைமுறைப்படுத்தல் தொடர்பான தேசிய சட்டங்களை இலங்கை நிறைவேற்றியது.
2005 ஆம் ஆண்டில் கண்ணிவெடிகளை தடை செய்தல் தொடர்பான பரிந்துரைகளை மேற்கொள்கின்ற ஒன்றியமானது இலங்கை அரசாங்கமானது தன்னார்வ உறுப்புரை 7 இன் வெளிப்படைத் தன்மைமிக்க அறிக்கையை APMBC இற்கு சமர்ப்பித்து CCW மற்றும் அதன் ஒழுங்குமரபுகள் ஆகியவற்றின் தரப்பொன்றாக இலங்கை வருவதற்கு உற்சாகப்படுத்தியதுடன் அதனை சமர்ப்பிக்கும் படி இலங்கை அரசாங்கத்திடம் வெற்றிகரமாக ஆதரவு கோரி நின்றது. மேலும் SLCBL ஆனது தேசிய கண்ணிவெடி அகற்றல் உபாயமுறைகளை தயாரித்தல் தொடர்பில் ஈடுபட்டதுடன் மற்றும் தேசிய மற்றும் சர்வதேச கண்ணிவெடி அகற்றல் தொடர்பான செயலமர்வுகள், பரிந்துரை அமர்வுகள் / கலந்துரையாடல்கள் போன்றவற்றை CRPD. அதனோடு தொடர்புடைய நிகழ்வுகள் பற்றி மேற்கொண்டதுடன், இது சர்வதேச கண்ணிவெடி அகற்றல் விழிப்புணர்வு தினம் APMBC மற்றும் CCM இற்கான MSPக்களை உள்ளடக்கியதாக காணப்பட்டது.
2018 ஆம் ஆண்டில், SLCBL ஆனது அரசாங்க திரைப்படக் கூட்டுத்தாபன பிரிவுடன் கூட்டிணைந்து "கண்ணிவெடிகள் அற்ற நிலத்திற்கான தாகம்" என்ற தொனிப்பொருளில் ஆவணப்படம் ஒன்றை தயாரித்ததுடன் 2018 ஆண்டில் ஜெனீவாவில் நடைபெற்ற APMBC இற்கான MSP இன் 17 ஆவது அமர்வின் பொழுது இது திரையிடப்பட்டது. ஐக்கிய நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளுக்கான ஜெனீவாவிலுள்ள இலங்கை தூதரகத்தினால் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு அதற்கான உதவிகளும் வழங்கப்பட்டன.
2019 ஆம் ஆண்டில், கனேடிய அரசாங்கத்தின் ஆதரவுடன் "அச்சமின்றி வெளியில் செல்லுதல்" என்ற தொனிப்பொருளில் ஆவணத் திரைப்படம் ஒன்றினைத் தயாரித்தது. “இலங்கையில் கண்ணிவெடி அகற்றல் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ள பெண்களை அடிப்படையாகக் கொண்டு சிங்களம், தமிழ், ஆங்கிலம் மும்மொழிகளில் இது தயாரிக்கப்பட்டது. "இலங்கையின் கண்ணிவெடி அகற்றல் கதை: அடைவுகள், சவால்கள், வாய்ப்புகள்" என்ற தொனிப்பொருளில் வெளியீடுகளையும் மேற்கொண்டது. நோர்வேயில் நடைபெற்ற APMBC இன் நான்காவது மீளாய்வு மாநாட்டின் பொழுது இத்திரைப்படம் திரையிடப்பட்டதுடன் வெளியீடுகளும் மேற்கொள்ளப்பட்டன.
APMBC, CCM மற்றும் CRPD தொடர்பில் இலங்கையில் வெற்றிகரமாக பரிந்துரைகளை மேற்கொண்டதன் பின்னர், இந்த மூன்று முக்கிய சமவாயங்கள் மற்றும் ஏனைய சமவாயங்களுக்கு இணங்கி அவற்றை ஏற்றுக் கொள்வதற்கான செயன்முறைகளை பிராந்திய அரசாங்கங்கள் மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை SLCBL மேற்கொண்டது. இதனது முதலாவது பணியாக, 2018 ஆம் ஆண்டில் மாலைதீவு அரசாங்கத்தை சந்தித்து, CCM மற்றும் ஏனைய சமவாயங்கள் ஆகியவற்றை ஏற்றுக் கொள்வது தொடர்பான சாத்தியப்பாடுகளை கலந்துரையாடுவதற்காக SLCBL செயலகம், ஆயுதங்களை களைதல் மற்றும் அபிவிருத்தி தொடர்பான ஒன்றியம் (FDD) மாலைதீவிற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டது. 2019 ஆம் ஆண்டில் மாலைதீவானது CCM, ஆயுத வியாபாரம் தொடர்பான உடன்படிக்கை (ATT) மற்றும் அணு ஆயுதங்களை தடை செய்தல் உடன்படிக்கை (TPNW ஆகியவற்றிற்கு மாலைதீவு இணங்கியது. பங்களதேஷ், பூட்டான் ஆகிய நாடுகளில் CCM மற்றும் ஏனைய சமவாயங்களுக்கு இணங்குதல் தொடர்பான பரிந்துரைகளை தொடர்ச்சியாக FDD மேற்கொண்டு வருகின்றது. 2019 ஆம் ஆண்டில் பங்களதேஷ் TPNW ஐ ஏற்றுக் கொண்டது.
CCM மற்றும் APMBC இன் MSP இல் காத்திரமான பங்குபற்றுதல் மூலம் சர்வதேச மனிதாபிமான ஆயுதம் களைதல் சமூகத்துடன் தொடர்ச்சியான ஈடுபாடுகளை SLCBL இன் இளைஞர் பிரிவு மேற்கொள்கின்றனர். கனடாவின் கண்ணிவெடி அகற்றல் அமைப்பின் உதவியுடன் அர்ப்பணிப்புடன் மற்றும் அனுபவங்களைக் கொண்ட குழுவொன்றான கண்ணிவெடி அகற்றல் அமைப்பின் ஓர் அங்கமாக இவர்கள் செயற்படுகின்றனர். பிரச்சாரப் பணிகள் தொடர்பான பிரசுரங்களை மேம்படுத்துவதற்காக ஆக்கங்கள் மற்றும் பங்களிப்புகள் உள்ளடங்கலாக விசேடமாக எழுதப்பட்ட ஆவணங்கள் உள்ளடங்கலாக பிரச்சாரம் தொடர்பான காத்திரமான பங்களிப்புகளை வழங்குவதன் மூலம் SLCBL இன் இளைஞர் பிரிவு பிரச்சார பரிந்துரைகளுக்கான உதவிகளை வழங்கின்றனர்.
மனிதாபிமான நிறுவனங்களின் கூட்டமைப்பு தெற்காசிய சிறிய ஆயுதங்கள் வலையமைப்பு. இயலாமையுடன் கூடிய ஆட்களை புனர்வாழ்வளிப்பதற்கான இலங்கை மன்றம் ஆகியவற்றின் கீழ் தென் ஆசிய சர்வதேச பங்காண்மை, மதங்களுக்கிடையிலான சமாதான பவுன்டேஷன், கண்ணிவெடிகளை தடை செய்வதற்கான பரிந்துரை அமைப்பு ஆகியவற்றின் கீழ் கடந்த காலத்தில் SLCBL செயற்பட்டது. 2018 ஆம் ஆண்டு முதல் SLCBL ஆனது ஆயுதங்களை களைதல் மற்றும் அபிவிருத்தி தொடர்பான அமைப்பின் கீழ் செயற்பட்டு வருகின்றது.
1997 ஆம் ஆண்டின் நோபல் சமாதானப் பரிசிற்கான இணை விருதினை பெற்றுக் கொண்ட, கொத்தணி குண்டுகள் பற்றிய அமைப்பு (CMC) ஆகியவற்றோடு கண்ணிவெடிகளை தடை செய்வதற்கான சர்வதேச பிரச்சாரம் (ICBL) ஆகியவற்றுடன் SLCBL இணைக்கப்பட்டுள்ளது.