5 ஆம் மாடி,செத்சிறிபாய கட்டடம் 1, பத்தரமுல்ல, இலங்கை
தேசிய கண்ணிவெடி செயற்பாட்டு மையம்
கிளிநொச்சியில் சர்வதேச கண்ணிவெடி விழிப்புணர்வு தினம்
கண்ணிவெடி விழிப்புணர்வு தினத்தைக் கொண்டாடுவதற்கு, தேசிய கண்ணிவெடி செயற்பாட்டு நிலையம் (NMAC) MAG, HALO, DASH, SHARP மற்றும் இலங்கை இராணுவத்தின் மனிதாபிமான கண்ணிவெடி அகற்றல் பிரிவுடன் இணைந்து ஏப்ரல் 6ஆம் திகதி கிளிநொச்சி பொது மைதானத்தில் சிநேகபூர்வமான கிரிக்கட் போட்டியில் பங்குபற்றியது. (மேலும் வாசிக்கவும்)
இந்த தினம் கண்ணிவெடிகள் மற்றும் அவற்றை இல்லாதொழிப்பதற்கு மேற்கொள்ளும் முயற்சி என்பவை பற்றிய விழிப்புணர்வை மேம்படுத்துவதற்கு அர்ப்பணிக்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சி நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் கௌரவ பிரசன்ன ரணதுங்க மற்றும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஏனைய அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகள், வட மாகாண ஆளுனர், பி.எஸ்.எம்.சார்ல்ஸ் மற்றும் சிரேஷ்ட அரசாங்க பிரதிநிதிகள் பொது மக்களுக்கும் கண்ணிவெடி செயற்பாட்டு அமைப்புகளின் ஊழியர்களின் உதவுவதற்காக இந் நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.
ஏப்ரல் மாதம் 6ஆம் திகதி இந்த நிகழ்வுடன் இணைந்ததாக, கண்ணிவெடி செயற்பாட்டு இயக்குனர்கள் யுத்தத்தின் பின் எஞ்சியிருக்கின்ற பொருட்களால் ஏற்படும் ஆபத்து மற்றும் அறிமுகமில்லாத பொருட்களைக் காணும்போது எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதைப் பற்றியும் விழிப்புணர்வூட்டுவதற்கு வெடிபொருட்கள் கல்வி (EORE) அமர்வுகளை கிளிநொச்சி நகரில் நடத்தினர்.