கண்ணிவெடி அகற்றல் உபாயமுறையை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் இலங்கைக்கு உதவுவதற்கான எமது தற்போதைய முயற்சிகளின் ஓர் அங்கமாக, மனிதாபிமான ரீதியான கண்ணிவெடி அகற்றல் தொடர்பான ஜெனீவா சர்வதேச நிலையமானது (GICHD) 2024 ஜூனில் மூன்று முக்கிய செயலமர்வுகளை நடாத்தியது:
இந்த செயற்பாடுகளை சாத்தியமாக்குவதற்கு தாராளமாக உதவிய அரசியல் மற்றும் இராணுவ அலுவல்கள் தொடர்பான அரச பணியகத்திற்கான US திணைக்களம் மற்றும் ஜேர்மன் பெடரல் வெளிநாட்டு அலுவலகம் (GFFO) ஆகியவற்றிற்கு GICHD மற்றும் NMAC ஆகியன தனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றது. இந்த செயலமர்விற்கான, அதன் வெற்றிக்கான காத்திரமான பங்களிப்புகளை வழங்கிய MAG, HALO Trust, DASH, SHARP, இலங்கை இராணுவத்தின் மனிதாபிமான கண்ணிவெடி அகற்றல் பிரிவூ (HDU) உள்ளடங்கலாக சகல பங்குபற்றுநர்களுக்கும் எமது உளமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.