NATIONAL MINE ACTION CENTRE (NMAC)

தேசிய கண்ணிவெடி செயற்பாட்டு மையம்

5 ஆம் மாடி,செத்சிறிபாய கட்டடம் 1, பத்தரமுல்ல, இலங்கை

தேசிய கண்ணிவெடி செயற்பாட்டு மையம்

வெடிப்பொருட்கள் இடர் கல்வி (EORE)

“வெடிப்பொருட்கள் இடர் கல்வி (EORE)” என்ற பதம் பெண்கள், பெண்பிள்ளைகள், ஆண்பிள்ளைகள் மற்றும் ஆண்கள் ஆகியோருக்கு வெடிப்பொருட்களினால் (EO) ஏற்படக் கூடிய காயங்களினால் விளையும் இடரைக் குறைப்பதற்கு அவர்களின் பல்வேறு விதமான வடுபடும் தன்மைகள், வகிபாகங்கள் மற்றும் தேவைகள் என்பவற்றை உயர்த்துவதற்கு விழிப்புணர்வூட்டல் மற்றும் நடத்தை ரீதியான மாற்றத்தை ஊக்குவித்தல் போன்ற நடவடிக்கைகளைக் குறிக்கிறது. (IMAS 12.10)

கண்ணிவெடிகளை அகற்றும் பணிகளைப் பூர்த்திசெய்வதில் ஐந்து கண்ணிவெடி  செயற்பாட்டாளர்கள் (HALO, MAG, DASH, SHARP, SLA – HDU) EORE நடவடிக்கைகளை மேற்கொள்ளுகின்றனர். இந்த செயல்பாடுகள் கல்வி மற்றும் பயிற்சியளித்தல், அச்சு ஊடாக வெளியீடுகளை விநியோகித்தல், துண்டுப் பிரசுரங்களைப் பயன்படுத்துதல், சுவர் சித்திரம், வீடு வீடாக விஜயம் செய்தல், பாதிக்கப்பட்ட சமூகங்கள், அரசாங்க உத்தியோகத்தர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் சிறுவர் கழகங்கள் ஆகியோருக்கு இலக்காகக் கொண்ட பொதுமக்களுக்கு தகவல்களை வழங்கும் நிகழ்ச்சிகள் போன்ற பல்வேறு முறைகளை உள்ளடக்கியது

கீழுள்ள அட்டவணையில் காட்டப்பட்டுள்ளபடி 2023ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரையில் மொத்தமாக 1,074 EORE நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் மூலம் உயர் பாதிப்பிற்குரிய பிரதேசங்களில் வாழும் 68,043 பெண்கள், பெண்பிள்ளைகள், ஆண்பிள்ளைகள் மற்றும் ஆண்கள் இதில் பயனடைந்துள்ளனர். 2015ஆம் ஆண்டு EORE நிகழ்ச்சித்திட்டத்தை ஆரம்பித்த HALO நிறுவனம், செயற்பாடுகள் மற்றும் பயனாளிகள் என்பவற்றில் 80%இனை பதிவு செய்து பிரதான பங்கை வகிக்கின்றது.

செயற்பாட்டாளர்* EORE திட்டத்தின் தொடக்க ஆண்டு EORE செயல்பாடுகளின் எண்ணிக்கை பெண்களின் எண்ணிக்கை பெண்களின் எண்ணிக்கை
(18 வயதுக்கு கீழ்)
ஆண்களின் எண்ணிக்கை ஆண்களின் எண்ணிக்கை
(18 வயதுக்குக் கீழ்)
HALO
2015
878
14638
13037
13783
12434
DASH
2020
102
998
4799
863
4621
MAG
2021
74
332
782
439
810
SHARP
2021
15
82
165
80
170
TOTAL
1069
16050
18793
15165
18035

இதை வெளியிடும் நேரத்தில் SLA HDU இற்கான தரவுகள் கிடைக்கவில்லை; பின்னர் இது காலத்திருத்தம் செய்யப்படும்.

கடந்த தசாப்தத்தில், இலங்கையில் EO விபத்துக்களில் குறிப்பிடத்தக்க குறைவு ஏற்பட்டுள்ளது. EORE க்கான நிதியுதவிகள் மட்டுப்படுத்தப்படுவதை அடையாளம் கண்டு, இலங்கை EOஇனால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை வினைத்திறன் மிக்க வகையில் முகாமைப்படுத்துவதற்கும் தரவுகளைச் சேகரிப்பதற்கும் நிலைபேறான திறனை பேணுவதற்கும் விரிவான மூலோபாயத்தின் ஒரு பகுதி என்ற வகையில் பிரதான நடவடிக்கைகளைச் செயல்படுத்தியுள்ளது.

இந்த முயற்சிகளில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் பாடசாலை பாடத்திட்டத்தில் EORE இனை சேர்த்துக்கொள்ளுவதும் சேர்த்துக்கொள்ளப்பட்டது. EORE இற்கான பயிற்சி உபகரணங்கள் மற்றும் கருவிகள் வினைத்திறனை அடையும் பொருட்டு தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் வழங்கப்பட்டன. EORE செயற்பாடுகளின் போது கண்ணிவெடி செயற்பாட்டாளர்களால் பயன்படுத்தப்பட்ட கருவிகளைக் (Tools) கீழே காண்க.

இதற்கு மேலதிகமாக, கிராம கண்ணிவெடி செயற்பாட்டு குழுக்கள் உயர் பாதிப்பு உள்ள பிரதேசங்களுக்கு உதவி செய்கின்ற போது, குறைந்த முன்னுரிமை அளிக்கப்படுகின்ற பிரதேசங்களில் EO இடரைக் கண்காணிப்பதற்கு தற்பொழுது செயற்படுகின்ற கிராம அபிவிருத்தி குழுக்கள் ஈடுபடுத்தப்படுகின்றன. கண்ணிவெடி செயற்பாடுகளைத் திட்டமிடுவதை அறிவிக்கும் தரவுகள் கிடைக்கக் கூடியதாக இருக்கின்ற அதே வேளையில் IMSMAஇற்கு மேலதிகமாக, வீதி விபத்துக்களைக் கண்காணிப்பதற்கு நாட்டில் காயங்களை நுண்ணாய்வு செய்யும் முறைமை ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் EO நிகழ்வுகளை திரையில் காட்ட உடன்பட்டுள்ளதோடு, இன்று வரை இந்த முறைமை நன்றாகவும் நிலைபேறாகவும் செயற்படுகின்றது.

Skip to content