NATIONAL MINE ACTION CENTRE (NMAC)

தேசிய கண்ணிவெடி செயற்பாட்டு மையம்

5 ஆம் மாடி,செத்சிறிபாய கட்டடம் 1, பத்தரமுல்ல, இலங்கை

தேசிய கண்ணிவெடி செயற்பாட்டு மையம்

பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவி

பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவி (VA) என்ற பதம், கண்ணிவெடி செயற்பாட்டு சூழலில் வெடிப்பொருட்களால் (EO) பாதிக்கப்பட்டவர்களின் தேவைகள் மற்றும் உரிமைகளை நிவர்த்தி செய்யும் நடவடிக்கைகளின் தொகுப்பைக் குறிக்கிறது. அவசர மற்றும் தற்போதைய மருத்துவ பராமரிப்பு, மறுவாழ்வு, உளவியல் மற்றும் உளவியல்-சமூக ஆதரவு மற்றும் சமூக-பொருளாதார உள்ளடக்கம் ஆகியவற்றை உள்ளடக்கியது. மேலும் VAஇல் தரவுகள் சேகரிப்பு, சட்டங்கள் மற்றும் கொள்கைகள் என்பவையும் உள்ளடங்குகின்றன. (IMAS 13.10)

EO பாதிக்கப்பட்டவர்களில் காயமடைந்தவர்கள் மற்றும் கொல்லப்பட்டவர்கள், அவர்களின் குடும்பங்கள் மற்றும் EOவினால் பாதிக்கப்பட்ட சமூகங்கள் என்பவையும் உள்ளடங்குகின்றன.

விசேடத்துவமான VA முயற்சிகள் குறுங்காலத் தீர்வுககளாக அமைந்திருப்பதுடன், அவை பாதிக்கப்பட்டவர்கள் பரந்தளவு கட்டமைப்பிற்க்குள் உள்வாங்கப்படும் வரையில் மட்டும் பின்பற்றப்பட வேண்டும் எனும் கோட்பாட்டுக்கு இலங்கை முழு ஆதரவு அளிக்கிறது. இலங்கை கண்ணிவெடி செயற்பாட்டு நிகழ்ச்சித்திட்டம் VAஇன் பொறுப்புக்களை ஆதரவு அளிக்கும் பணியாக அமைந்திருப்பதாகக் கருதுகின்றது. விழிப்புணர்வூட்டலை மேம்படுத்துதல், இணைப்பாகம் மற்றும் தகவல் போன்றன அவையாகும். அதன்படி இலங்கையின் கண்ணிவெடி செயற்பாட்டு நிகழ்ச்சித்திட்டம் தகவல் முகாமைத்துவம், இணைப்பாக்கம் மற்றும் விழிப்புணர்வூட்டலை மேம்படுத்துதல் என்பவை சம்பந்தப்பட்ட மூலோபாய சவால்களை அணுகத் தன்னை அர்ப்பணித்துள்ளது.

 ஆகியோரால் கூட்டாக வரைவிலக்கணப்படுத்தப்படுகிறது:

பின்வரும் செயற்பாட்டு குறிப்புகள் NMAC மற்றும் தகுந்த அரசாங்க பங்கீடுபாட்டாளர்கள்

பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வழங்கும் நிகழ்ச்சி நிரலை முன்னெடுப்பதற்கும், முயற்சிகளை இரட்டிப்பாக்குவதைத் தடுப்பதற்கும், EO பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய துல்லியமான தகவல்களை உறுதி செய்வதற்கும் தொடர்புடைய பங்குதாரர்களுடன் (அரசாங்கம், ஐ.நா முகவர் நிலையங்கள் மற்றும் சிவில் சமூகம்) தேசிய மற்றும் மாகாண மட்டங்களில் காலாண்டு ஒருங்கிணைப்புக் கூட்டங்களை திட்டமிடுதல். ஒவ்வொரு பங்கீடுபாட்டாளரும் இந்த விடயத்திற்காக VA மைய இடத்தில் கூடும் ஒருவரை நியமிக்க வேண்டும்.

EO விபத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் நல்லமுறையில் அடையாளம் காணப்பட்டு உதவி செய்யப்படுகின்றனர் என்பதை உறுதிப்படுத்துவதற்கு சமூக சேவைகள் திணைக்களத்தின் CBR நிகழ்ச்சித்திட்டத்துடன் இணைப்பாக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுதல்.

காயங்கள் நுண்ணாய்வு முறைமைகள் படிவத்தில் EO விபத்துகள் வலதுகுறைவை ஏற்படுத்தியுள்ளது என்பதை உறுதிப்படுத்துவதற்கு சுகாதார அமைச்சின் காயங்கள் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகுடன் இணைப்பாக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுதல்.

மாற்றுத் திறனாளிகள் பற்றிய தேசிய செயற்பாட்டுத் திட்டம் மற்றும் வரவிருக்கும் மாற்றுத் திறனாளிகள் சட்டமூலம் போன்ற பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுதல் கூட்டிணைக்கப்பட வேண்டும் என்ற கொள்கைகளையும் திட்டங்களையும் அடையாளம் காணுதல்.

IMSMAவில் தற்போதைய பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சம்பவ தரவுகள் கிடைக்கக் கூடியதாக இருக்கின்றன என்பதை சரிபார்த்தல் மற்றும் கண்ணிவெடிகளால் பாதிக்கப்பட்டவர்களின் தற்போதைய நிலையையும் அவர்களுடைய தேவைகளையும் மதிப்பீடு செய்வதற்கு கண்ணிவெடிகளால் மொத்தமாகப் பாதிக்கப்பட்டவர்களில் 10%இனை எடுத்து ஆரம்ப ஆய்வு ஒன்றை நடத்துதல். இது நிதியுதவி அளிப்பதற்கு முன்னுரிமை அளிப்பது பற்றி அறிவிக்கும்.

2024ஆம் ஆண்டு மார்ச் மாதம், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவது சம்பந்தப்பட்ட மேற் குறிப்பிடப்பட்ட செயற்பாடுகளை அமுல்படுத்துவதற்கு உதவி பெறுவதற்கு சமூக சேவைகள் அமைச்சருடன் ஒரு சந்திப்பை நடத்துவதற்கு நடவடிக்கைகளை NMAC முன்னெடுத்தது. நாட்டில் இயங்குகின்ற சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களின் (INGOS) உதவியைப் பெற்றுக்கொள்ளுவதற்கு தற்பொழுது பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. EO விபத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் தேவைகளை அணுகுவதற்கு வசதிப்படுத்தும் உதவியையும் இணைப்பாக்கத்தையும் மேற்கொள்ள NMAC தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளது.

Skip to content