NATIONAL MINE ACTION CENTRE (NMAC)

தேசிய கண்ணிவெடி செயற்பாட்டு மையம்

5 ஆம் மாடி,செத்சிறிபாய கட்டடம் 1, பத்தரமுல்ல, இலங்கை

தேசிய கண்ணிவெடி செயற்பாட்டு மையம்

கண்ணிவெடி கையிருப்புக்களை அழித்தல்

இலங்கை 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆட்களுக்கெதிரான கண்ணிவெடி தடைச்சட்டத்தினை (APMBC)  ஏற்றுக் கொண்டது. இந்த உடன்படிக்கை 2018 ஜூன் 1 ஆம் திகதி முதல் அமுலுக்கு வந்தது. 2018ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சமர்ப்பித்த அதன் வெளிப்படைத் தன்மை அறிக்கையில் இலங்கை அதன் உடைமையில் சேகரித்து வைக்கப்பட்டுள்ள ஆட்களுக்கெதிரான கண்ணிவெடிகளின் கையிருப்பு விபரத்தை அறிவித்தது.

ஆட்களுக்கெதிரான கண்ணிவெடி தடைச்சட்டத்தின் (APMBC) உறுப்புரை 4ஆனது, அந்த அரச தரப்பினர் கண்ணிவெடி தடை ஒப்பந்தத்தில் பிரவேசித்து முடிந்தளவு விரைவாக அல்லது நான்கு வருடங்கள் முடிவடைவதற்கு முன்னர் அதன் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள மற்றும் உடைமையாகக் கொண்டிருக்கின்ற அனைத்து ஆட்களுக்கெதிரான கண்ணிவெடிகளை அழிப்பதை வேண்டி நிற்கின்றது.

இலங்கை 2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30ஆம் திகதி இந்தக் கடப்பாட்டை நிறைவு செய்ததாக அறிவித்தது. நாட்டுக்கு விதிக்கப்பட்ட முடிவு திகதிக்கு ஏறக்குறைய ஒரு வருடத்திற்கு முன்னர் 12,000 நிலக்கண்ணிவெடிகளை அழித்ததாக இலங்கை அறிவித்துள்ளது.

மேலதிக தகவல்களுக்கு கீழுள்ள தொடர்பை கிளிக் செய்யவும்:

Skip to content