சிவில் யுத்தம் முடிவடைந்து ஒரு தசாப்தத்திற்குப் பின்னர், இலங்கை கண்ணிவெடி செயற்பாட்டு நடவடிக்கைகளின் இறுதி கட்டத்தை அடைந்துள்ளது. நான்கு (MAG, HALO, DASH, மற்றும் SHARP) மனிதாபிமான கண்ணிவெடி செயற்பாட்டாளர்களை உள்ளடக்கிய செயலணியில் 3,000 இற்கு மேற்பட்ட பணியாளர்கள், அவர்களின் மூன்றில் ஒரு பங்கினர் பெண்கள், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தங்கியிருக்கின்றனர்.
கண்ணிவெடிகள் காணப்படும் பிரதேசங்களில் கண்ணிவெடி அகற்றல் நடவடிக்கைகளை 2027ஆம் ஆண்டின் இறுதியில் பூர்த்தி செய்ய எதிர்பார்க்கப்படுவதோடு, 2023-2027 தேசிய கண்ணிவெடி அகற்றல் நடவடிக்கைகளைப் பூர்த்தி செய்யும் மூலோபாயத்தின் "ஊழியர்களின் நிலைமாறல்" மூலோபாய நோக்கம் 4இல் குறிப்பிடப்பட்டுள்ள கண்ணிவெடி செயற்பாட்டு ஊழியர்களின் நேர்த்தியான நகர்வை உறுதிப்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் தகுந்த திட்டங்களை உறுதிப்படுத்துவதற்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளது. இந்த மூலோபாய செயற்பாடு MAG இனால் விருத்தி செய்யப்பட்ட சட்டகத்தில் அதன் சொந்த ஊழியர்களுக்கானதாக இருப்பதோடு, அந்த துறையில் உள்ள அனைத்து ஊழியர்களினதும் நிலைமாறல் செயல்படுகள் MAGஇன் தலைமையில் முன் எடுக்கப்படுகின்றது.
கண்ணிவெடி செயற்பாட்டு துறை நிறைவடைவதனால் கண்ணிவெடி அகற்றுகின்றவர்கள் தொழில் இன்மை மற்றும் கடும் வறுமை ஆகிய உயர் இடருக்கு உள்ளாகும் நிலை ஏற்படுகிறது. போதியளவு உதவி வழங்கப்படாவிட்டால் பிராந்திய ரீதியில் நிலையற்ற தன்மை உருவாகும் ஆபத்து நிலவுகிறது. 2002ஆம் ஆண்டிலிருந்து கண்ணிவெடி அகற்றல் செயற்பாட்டுக்கு யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் முறைசார்ந்த மற்றும் நல்ல சம்பளம் கிட்டும் தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தியிருந்தது. நாட்டின் ஏனைய பகுதிகளோடு ஒப்பிடுகின்ற போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பொருளாதார நிலை பாதிக்கப்பட்டதாகவே இருந்தது. கல்வி அல்லது முறைசார்ந்த தகைமைகள் என்பவற்றைப் பொருட்படுத்தாமல் கண்ணிவெடி அகற்றுகின்றவர்கள் உள்நாட்டு சராசரி சம்பளத்தை விட அதிகமாகவே பெற்றனர். அது மாத்திரமல்ல கண்ணிவெடி அகற்றுகின்ற துறையில் சேர்வதற்கு முன்னர் அவர்கள் பெற்ற சம்பளத்தை விட குறிப்பிடத்தக்களவு அதிகமாகவே இருந்தது. குறிப்பாக பெண் பணியாளர்களுக்கு அதிகமாகவே கிடைத்தது. கண்ணிவெடி அகற்றும் பணியில் அவர்கள் பெற்ற தொழில்நுட்ப அறிவு ஏனைய வெளி தொழில் துறைக்கு இலகுவாக மாற்ற முடியாததாக இருந்ததோடு கண்ணிவெடி அகற்றுகின்றவர்கள் செயலணியில் மூன்றில் இரண்டு மடங்கு தொழில் திறமையைப் பெற்றிருந்தனர்.
MAG, 2020-2021 ஆம் ஆண்டுகளில் திறன் கையகப்படுத்தல் மற்றும் கண்ணிவெடி அகற்றலுக்குப் பிந்தைய வாழ்வாதார மாற்ற மூலோபாயத்தை உருவாக்கல் தொடர்பான முயற்சிகளை முன் எடுத்தது. அதனைத் தொடர்ந்து இலங்கையின் புதிய தேசிய கண்ணிவெடி செயற்பாட்டு மூலோபாயத்திற்குள் கண்ணிவெடி அகற்றலுக்குப் பிந்தைய வாழ்வாதார நடவடிக்கைகள் உட்படுத்தப்பட்டன. இந்த நடவடிக்கையில் NMAC தீவிரமாக ஈடுபட்டிருந்த அதே நேரத்தில், மதியுரைக் குழுவில் DASH, SHARP, HALO மற்றும் GICHD பிரதிநிதிகள் உறுப்பினர்களாக இருந்தனர்.