NATIONAL MINE ACTION CENTRE (NMAC)

தேசிய கண்ணிவெடி செயற்பாட்டு மையம்

5 ஆம் மாடி,செத்சிறிபாய கட்டடம் 1, பத்தரமுல்ல, இலங்கை

தேசிய கண்ணிவெடி செயற்பாட்டு மையம்

இலங்கை தேசிய கண்ணிவெடி செயற்பாட்டு பூர்த்தி மூலோபாயம் 2023 – 2027

தயவுசெய்து முழுமையான ஆவணத்தை

மனிதாபிமான கண்ணிவெடி அகற்றுதலுக்கான ஜெனிவா சர்வதேச மையத்தின் (GICHD) உதவியுடன் தேசிய கண்ணிவெடி செயற்பாட்டு மையத்தினால் (NMAC) விருத்தி செய்யப்பட்ட தேசிய கண்ணிவெடி செயற்பாட்டு பூர்த்தி மூலோபாயம் 2023 முதல் 2027 வரை இலங்கையின் கண்ணிவெடி செயற்பாட்டு நிகழ்ச்சித்திட்டத்திற்காக மூலோபாய திசைமுகப்படுத்தலை சமர்ப்பிக்கிறது. இலங்கையின் முன்னைய தேசிய கண்ணிவெடி செயற்பாட்டு மூலோபாயத்திலிருந்து கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்ல நடைமுறைகள் என்பவற்றைக் கவனத்திற் கொண்டு இது உருவாக்கப்பட்டுள்ளது.

நிலைபேறான அபிவிருத்தி இலக்குகள் வரிசையில் (SDGs), ஆட்களுக்கு எதிரான கண்ணிவெடி தடைச் சமவாயம் (APMBC), கொத்தணி குண்டுகள் பற்றிய சமவாயம் (CCM), மாற்றுத் திறனாளிகளின் உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சமவாயம் (CRPD) மற்றும் சில மரபுரீதியான ஆயுதங்கள் பற்றிய சமவாயம் (CCW) என்பவற்றின் கீழ் சர்வதேச சமவாய கடப்பாடுகளை செயற்படுத்துவதற்கு இலங்கை அதன் உறுதிப்பாட்டை வலுப்படுத்துகிறது.

 

மூலோபாய நோக்கங்கள்

இடர்கள் தணிக்கும் நடவடிக்கைகள்

இலங்கையின் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகள்

 சவால்களையும் செயற்பாட்டு இடைநிறுத்தல்களையும் சர்வதேச நன்கொடை வழங்கும் நிறுவனங்களுக்கு அறிவித்தல், வெளிப்படைத் தன்மை மற்றும் தொடர்ச்சியான தொடர்பாடலை உறுதிப்படுத்துதல்

குறைந்த சர்வதேச நன்கொடை வழங்கல்

தேசிய கண்ணிவெடி செயற்பாட்டு மூலோபாயம் - மூலோபாய முன்னுரிமை பற்றிய தெளிவு

தெளிவான இலக்குகளை வழங்குகின்ற வளங்கள் திரட்டும் மூலோபாயம்

NMAC, RMAO மற்றும் SLA HDU என்பவற்றிற்கு நிதியுதவி போதாமை

NMAC, RMAO மற்றும் SLA - HDUஇன் பொறுப்புகளை மேற்கொள்ளுவதற்கு முழுமையான வளங்களைப் பெறுவதை உறுதிப்படுத்துவதற்கு திறைசேரி ஆதரவைத் தேடுதல்

தேசிய கண்ணிவெடி செயற்பாட்டு மூலோபாயம் - மூலோபாய முன்னுரிமை பற்றிய தெளிவு

வரையறுக்கப்பட்ட இணைப்பாக்கம் மற்றும் தொடர்பாடல்

இலங்கையின் புதிய தேசிய கண்ணிவெடி செயற்பாட்டு மூலோபாயம்

தொடர்பாடல் மற்றும் இணைப்பாக்கம் என்பவற்றை பலப்படுத்துவதற்கான ஈடுபாடு

தொற்றுப் பரவல்

கடந்த இரண்டு வருடங்களிலிருந்து கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நற் செயல்கள் என்பவற்றைப் பொருத்தமாக வருமானத்திற்குப் பயன்படுத்துதல்

துறைசார் தொற்று நோய் வழிகாட்டல்

வரையறுக்கப்பட்ட தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை வாய்ப்புகள்

ஒழுங்கான அடிப்படையில் தொழில் சந்தையையும் பொருளாதார வாய்ப்புக்களையும் அவதானித்தல்; சூழலையும் மாற்றுவதற்கு பணியாளர் நிலைமாற்றத்திற்குப் பொருத்தமாக தலையீடுகளை செய்தல்; சவால்கள் மற்றும் புற சிரமங்கள் என்பவை பற்றி சர்வதேச நன்கொடை வழங்கும் நிறுவனங்களுக்கு அறிவித்தல்.

NMAC மற்றும் SLA-HDU என்பவை தேசிய செயற்பாட்டாளர்களான சமூக ஐக்கியத்திற்கான டெல்வொன் உதவி (DASH) மற்றும் ஸ்கெவிட்டா மனிதாபிமான உதவி மற்றும் நிவாரண கருத்திட்டம் (SHARP) என்பவற்றோடு நெருக்கமாகப் பணியாற்றுகின்றதோடு, சர்வதேச செயற்பாட்டாளர்கள் HALO Trust நிறுவனம் மற்றும் கண்ணிவெடி ஆலொசனைக் குழு (MAG) ஆகியவற்றுடன் இணைந்து EOஇனை அடையாளம் அடையாளம் கண்டு அழிக்கவும் IMASக்கு ஏற்ப EOREஇனை வழங்கவும் இலங்கை அரசாங்கத்திடமிருந்தும் பல சர்வதேச நன்கொடையாளர்களிடமிருந்தும் நிதி உதவியைப் பெற்று வருகின்றன. 2017ஆம் ஆண்டு APMBC அமைப்புடன் இலங்கை சேர்ந்ததை அடுத்து அதன் உறுப்புரை 5 கடப்பாடுகள் வரிசையில் 2028 ஜூன் 1ஆம் திகதிக்குள் அனைத்து AP கண்ணிவெடி உள்ள பிரதேசங்களை அடையாளம் காண்பதற்கும் அகற்றுவதற்கும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளது.

 

இலங்கை வினைத்திறன் மிக்க வகையில் அவர்களின் பணிப்பாணையை நிறைவேற்றுவதற்கு அதன் தேசிய கண்ணிவெடி செயற்பாட்டு கட்டமைப்புக்கு போதியளவு வளங்களையும் உபகரணங்களையும் கொண்டுள்ளது என்பதை உறுதிப்படுத்துவது உட்பட, அதன் கண்ணிவெடி செயற்பாட்டு நிகழ்ச்சித்திட்டத்தின் தேசிய உரிமையாண்மையை தொடர்ச்சியாக எடுத்துக்காட்டும்.

 

NMAC ஒழுங்கான மற்றும் கட்டமைக்கப்பட்ட இணைப்பாக்கத்தையும் இலங்கை அரசாங்க பிரதிநிதிகள், சர்வதேச நன்கொடை வழங்குநர்கள், செயற்பாட்டாளர்கள் மற்றும் ஏனைய பங்காளர்கள் ஆகியோருடன் வெளிப்படைத் தன்மையுடன் தகவல்களைப் பகிர்ந்துகொள்ளுவதற்கும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளது. அத்துடன், பங்காளர்களுடன் கூட்டாக ஆண்டுக்கு இருமுறை இணைப்பாக்க கூட்டங்களை ஒழுங்கு செய்கிறது.

 

APMBC, CCM மற்றும் CRPD என்பவற்றுக்கான அரச தரப்பு என்ற வகையில் தகவல் முகாமைத்துவம், இணைப்பாக்கம் மற்றும் விழிப்புணர்வை வளர்த்தல் என்பவற்றுடன் சம்பந்தப்பட்ட பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் (VA) மூலோபாய சவால்களை அணுகுவதற்கு இலங்கையின் கண்ணிவெடி செயற்பாட்டு நிகழ்ச்சித்திட்டம் தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளது.

 

இலங்கை அரசாங்கத்தையும் சர்வதேச நன்கொடை பங்காளர்களையும் இலக்காகக் கொண்டு வளங்களைத் திரட்டும் முயற்சிகள் தொடர்ச்சியாக நடைபெறும். இலங்கையின் கண்ணிவெடி செயற்பாட்டு நிகழ்ச்சித்திட்டம் இலங்கை அரசாங்கத்திடமிருந்து பெறும் நிதியுதவியை அதிகரித்துக்கொள்ளுவதற்கும், அதன் சர்வதேச நன்கொடை உதவியை விரிவாக்கிக்கொள்ளுவதற்கும் ஏனைய நிதி வழங்கும் மூலங்களைக் கண்டறிவதற்கும் வாய்ப்புகளைத் தேடும்.

2027ஆம் ஆண்டு இறுதிக்குள் EOஇனால் பாதுகாப்பற்ற இடங்களில் ஆய்வு மற்றும் வெடிபொருட்களை அகற்றும் நடவடிக்கையிலிருந்து, அறிக்கையிடப்படும் கண்ணிவெடி எச்சங்கள் தொடர்பில் செயலாற்றும் நிலைக்கு மாற்றம் அடையும்.

படிமுறை நடவடிக்கைமுறையின் ஊடாக SLA-HDU அதன் பொறுப்புகளை நிறைவேற்றுவதற்கு சரியான முறையில் ஆயத்தப்படுத்தப்பட்டதையும், ஊழியர்களைக் கொண்டிருப்பதையும், போதுமான வளங்களைக் கொண்டிருப்பதையும் இலங்கை அரசாங்கம் உறுதி செய்யும்.

 

இந்த நிலை மாற்றல் நடவடிக்கைமுறையின் ஒரு பகுதியாக, கண்ணிவெடி செயற்பாட்டு தகவல்களை (முன்னர் ஆய்வு செய்யப்பட்ட தரவுகள் மற்றும் அகற்றப்பட்ட பிரதேசங்கள் உள்ளிட்ட, EO விபத்து அமைவிடங்கள், போன்றவை) இலகுவாக அடைவதை உறுதிப்படுத்துவது முக்கியமானதாகும். அத்துடன் எதிர்காலத்தில் கறைபடிந்த EO எச்ச தரவுகளையும் சேகரித்து களஞ்சியப்படுத்த முடியும். இலங்கையின் பொலிஸ் செயலணி வெடிபொருள் அகற்றல் அழைப்புகளில் (EOD) பிரதான வகிபாகத்தை வகிக்கும். பாதுகாப்பான நடத்தையை ஊக்குவிப்பதற்கும் எதிர்கால EO விபத்துக்களின் அபாயங்களைக் குறைப்பதற்கும் நிலையான EORE கட்டமைப்புகள் தொடர்ந்து பலப்படுத்தப்படுவதையும் இலங்கை உறுதி செய்யும்.

இலங்கையின் கண்ணிவெடி செயற்பாட்டு நிகழ்ச்சித்திட்டத்தில் 3000இற்கு மேற்பட்ட ஆண், பெண் ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 2027ஆம் ஆண்டில் இந்த நிகழ்ச்சித்திட்டத்தைப் பூர்த்திசெய்ய எதிர்பார்ப்பதால் பொருத்தமான மற்றும் நிலைபேறான ஊழியர் நிலைமாற்றத்தின் முக்கியத்துவம் உறுதிப்படுத்தப்படுவதோடு நிலைமாற்ற நடவடிக்கைமுறையை அதிகரிப்பது முக்கியமானதாக இருக்கிறது.

இந்தப் பின்னணியில், MAGஇனால் 2020-2021ஆம் ஆண்டு காலப்பகுதியில், திறன்கள் கையகப்படுத்தல் மற்றும் கண்ணிவெடி அகற்றலுக்கு பின்னரான வாழ்வாதார நிலைமாற்ற மூலோபாயத்தை உருவாக்கல் தொடர்பான முயற்சிகளை முன்எடுத்தது. இலங்கையின் புதிய தேசிய கண்ணிவெடி செயற்பாட்டு மூலோபாயத்திற்கு கண்ணிவெடி செயற்பாட்டு ஊழியர்களின் நிலைமாற்றத்தை கூட்டிணைக்க உதவுவதற்கும், தேவைக்கு அதிகமாக ஊழியர்கள் இருக்கும் போது MAGஇன் கண்ணிவெடி அகற்றும் ஊழியர்களை மாற்று பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதற்கு உதவுவதற்கும், கண்ணிவெடி அகற்றியதன் பின்னர் இது உதவும். DASH, SHARP, HALO மற்றும் GICHD என்பவற்றின் பிரதிநிதிகள் மதியுரைக் குழுவில் அங்கத்தினர்களாக இருந்ததோடு, நிலைமாற்ற மூலோபாயத்தை விருத்தி செய்யும் நடவடிக்கைமுறையில் NMAC உடன் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர்.

இந்த மூலோபாய நோக்கம் MAG இனால் விருத்தி செய்யப்பட்ட பணியாளர் நிலைமாற்ற மூலோபாயத்தின் மீது தீவிரமாகக் கவனம் செலுத்தியதோடு, படிமுறை நடவடிக்கைமுறையையும் சமர்ப்பித்தது. இந்தப் பணியாளர் நிலைமாற்ற நடவடிக்கைமுறை மூன்று பிரதான கட்டங்களைச் சுற்றி கட்டமைக்கப்பட்டிருந்தது.

மாற்று உயர்-கிராக்கியுள்ள தொழில்களுக்கு வினைத்திறன் மிக்க வகையில் நிலைமாற்றும் வரை பணியாளர்களின் அத்தியாவசிய திறன்களையும் செயலூக்கத்தையும் மேம்படுத்துவதற்கு தலையீடு செய்தல்.

குறைந்த எண்ணிக்கையிலான ஊழியர்களைக் கொண்ட தன்னார்வ பணிநீக்கத் திட்டத்தை முன்னோடித் திட்டமாக செய்வதன் மூலம் கள பரிசோதனை மற்றும் கண்காணிப்பினூடாக தேவைக்கு அதிகமாக உள்ள பணியாளர்களின் பணிநீக்கத்தை அதிகரித்தல்

பரீட்சார்த்த பாடங்களிலிருந்து கற்றுக் கொண்டவற்றை உள்ளடக்கி, வருடாந்த இலக்கின் அடிப்படையில் ஊழியர்கள் பணிநீக்க திட்டத்தை அதிகரித்தல்

இலங்கை அரசாங்கம் NMACஇன் தலைமையில், நிலைபேறான, மாற்று பொருளாதார நடவடிக்கைகளுக்கு கண்ணிவெடி அகற்றுபவர்களை நேர்த்தியாக உயர்த்தும்.
Skip to content