NATIONAL MINE ACTION CENTRE (NMAC)

தேசிய கண்ணிவெடி செயற்பாட்டு மையம்

5 ஆம் மாடி,செத்சிறிபாய கட்டடம் 1, பத்தரமுல்ல, இலங்கை

தேசிய கண்ணிவெடி செயற்பாட்டு மையம்

ஆய்வு மற்றும் கண்ணிவெடி அகற்றல்

Created by Mas Dhimasfrom the Noun Project

2023 இல் கண்ணிவெடி அகற்றல்

5.33 km2 (5,331,285.55 m2)

2023இல் காணி விடுவிப்பு

6.1 km2 (6,130,384.55 m2)

Created by Luis Pradofrom the Noun Project

எஞ்சியுள்ள கறை:

23.7km² (2024 ஏப்ரல் மாதம் வரை)*

Land Released Outputs and Article 5 Compliance

Land Released 5.42 km2 (5,428,507 m2)
Land Cleared 5.06 km2 (5,060,687 m2)
Land Cancelled through Non-Technical Survey 0.0056 km2 (5,662 m2)
Land Reduced through Technical Survey 0.36 km2 (362,158 m2)
Land Released 5.88 km2 (5,884,246.1 m2)
Land Cleared 5.39 km2 (5,392,261.1 m2)
Land Cancelled through Non-Technical Survey 0.0056 km2 (5,639 m2)
Land Reduced through Technical Survey 0.48 km2 (486,346 m2)
Land Released 6.1 km2 (6,130,384.55 m2)
Land Cleared 5.33 km2 (5,331,285.55 m2)
Land Cancelled through Non-Technical Survey 0.021 km2 (21,654.50 m2)
Land Reduced through Technical Survey 0.77 km2 (777,444.50 m2)

*பூர்த்திசெய்யும் ஆய்வு நடவடிக்கைமுறையின் போது சேகரிக்கப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டு இங்கே தரப்பட்டுள்ள எண்கள் மாற்றமடையாலாம் என்பதை தயவுசெய்து அவதானிக்கவும்.

Summary of Mine Action Progress by District as of September 2024
For weekly update please refer to IMSMA (Simplified) Dashboard

கண்ணிவெடி அகற்றல் செயல் ஆற்றல்

இரண்டு சர்வதேச செயற்பாட்டாளர்கள்: 2002ஆம் ஆண்டிலிருந்து கண்ணிவெடி அகற்றல் ஆலொசனைக் குழு (MAG) மற்றும் HALO Trust நிறுவனம் (HALO)

இரண்டு தேசிய செயற்பாட்டாளர்கள்: 2010ஆம் ஆண்டிலிருந்து சமூக ஐக்கியத்திற்கான டெல்வொன் உதவி (DASH) மற்றும் 2016ஆம் ஆண்டிலிருந்து ஸ்கெவிட்டா மனிதாபிமான உதவி மற்றும் நிவாரண கருத்திட்டம் (SHARP)

இலங்கை இராணுவ கண்ணிவெடி அகற்றல் அலகு (HDU)

2002 ஆம் ஆண்டில் இலங்கையின் தேசிய கண்ணிவெடி நடவடிக்கை திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து, பல நிறுவனங்கள் கண்ணிவெடி அகற்றும் முயற்சிகளுக்கு தீவிரமாக ஆதரவளித்தனர், ஆனால் பின்னர் படிப்படியாக வெளியேறினர். டென்மார்க் கண்ணிவெடி அகற்றும் குழு (DDG), சுவிஸ் கண்ணிவெடி நடவடிக்கை அறக்கட்டளை (FSD), நோர்வே மக்கள் உதவி (NPA), HORIZON, மோதல் தடுப்புக்கான ஜப்பான் மையம் (JCCP), மிலிந்த மொரகொட மக்கள் வலுவூட்டல் நிறுவனம் (MMIPE), RONCO மற்றும் SARVATRA ஆகியவை இதில் அடங்கும்.

சுமார் மூன்று தசாப்தங்களாக இலங்கை பாதுகாப்பு படைக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் (LTTE) இடையில் நடைபெற்ற ஆயுதப் போர் காரணமாக அநேகமான பிரதேசங்கள், குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் பாரியளவில் பாரிய வெடிப்பொருள் ஆயுதங்களினால் (EO) பெரிதும் சேதமடைந்தன. இலங்கை பாதுகாப்பு படையும் தமிழீழ விடுதலைப் புலிகளும் (LTTE) நிலக்கண்ணி வெடிகளைப் புதைத்ததோடு ஏனைய வெடிப்பொருட்களை (EO) பரந்தளவில் பயன்படுத்தின. 1987ஆம் ஆண்டுக்கும் 1990ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் இந்திய சமாதான படை வந்திருந்த காலப்பகுதியில் அவர்களும் நிலக்கண்ணி வெடிகளைப் பயன்படுத்தினர். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பாரிய வெடிப்பொருள் ஆயுதங்களினால் கறைபடிந்திருந்த பிரதேசங்கள் சுத்தப்படுத்தப்பட்டன. 2006ஆம் ஆண்டில் முரண்பாடு உயர்ந்ததனால், அதன் விளைவாக அப்பிரதேசங்கள் மீண்டும் கறைபடிந்தன.

 

இலங்கையில் 2002ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட கண்ணிவெடி செயற்பாட்டு நிகழ்ச்சித்திட்டம் மூலம் 2022ஆம் ஆண்டு வரை 200Km² இற்கும் மேற்பட்ட பிரதேசம் சுத்தப்படுத்தப்பட்டது. அத்துடன் 100Km² இற்கும் மேற்பட்ட யுத்தம் இடம்பெற்ற பிரதேசங்கள் விடுவிக்கப்பட்டதோடு, 843,000இற்கு மேற்பட்ட ஆட்களுக்கு எதிரான கண்ணிவெடிகள் அழிக்கப்பட்டன. அண்ணளவாக 2,050 வாகன எதிர் கண்ணிவெடிகள் மற்றும் 360,700இற்கு மேற்பட்ட வெடிக்காத வெடிபொருட்கள் (UXO) அழிக்கப்பட்டன.

 

கண்ணிவெடி செயற்பாடுகளானது இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெயர்ந்தவர்களை (IDPs) மீள் குடியேற்ற பாதுகாப்பான காணிகளை விடுவித்தல் மற்றும் மீள்குடியேற்றம், புனர் நிர்மாணம் மற்றும் வாழ்வாதார நடவடிக்கைகளுக்கு பாதுகாப்பான காணிகளை விடுவித்தல் என்பவற்றில் பிரதான பங்கு வகிக்கின்றது. வீடமைப்பு மற்றும் நிர்மாண அமைச்சின் தரவுகளுக்கு அமைவாக உள்நாட்டில் இடம்பெயர்ந்த 900,000இற்கு மேற்பட்ட மக்கள் 2022 ஜூலை மாதம் வரை மீளக் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.

ஆட்களுக்கு எதிரான கண்ணிவெடி தடை ஒப்பந்தத்தில் (APMBC) விதிக்கப்பட்ட இறுதி நாளுக்கு முன்னர் பாரிய அளவிலான கறைபடிந்த காணிகளை சுத்தப்படுத்தும் பணிகளை பூர்த்திசெய்வதில் ஈடுபடும் சில அரசுகளில் இலங்கையும் ஒன்றாகும்.

 

2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆட்களுக்கு எதிரான கண்ணிவெடி தடை ஒப்பந்தத்தை (APMB) ஏற்றுக் கொண்டதை அடுத்து இலங்கை அதன் 5ஆம் இலக்க உறுப்புரையில் குறிப்பிடப்பட்ட கடப்பாடுகள் வரிசையில் 2028ஆம் ஆண்டு ஜூன் மாதம் 1ஆம் திகதியளவில் அனைத்து ஆட்களுக்கு எதிரான கண்ணிவெடி உள்ள பிரதேசங்களை அடையாளம் காண்பதிலும் கண்ணிவெடிகளை அகற்றுவதிலும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டது. மார்ச் 2023 இல், இலங்கை அரசாங்கம் (GoSL) இலங்கை தேசிய கண்ணிவெடி நடவடிக்கை நிறைவு மூலோபாயம் 2023-2027க்கு ஒப்புதல் அளித்தது, நிறைவு செய்வதற்கான அரசாங்கத்தின் மூலோபாய உறுதிப்பாட்டை வெளிப்படுத்தியது.

 

2022ஆம் ஆண்டில் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்ததன் காரணமாக கண்ணிவெடி செயற்பாட்டு அரச சார்பற்ற நான்கு நிறுவனங்கள் (MAG, HALO, DASH, மற்றும் SHARP) மொத்தமாக 74 நாட்கள் செயற்பாட்டை இடைநிறுத்தினாலும் முன்னைய ஆண்டைவிட அதிகரிப்பை பதிவு செய்து 5.26Km² கண்ணிவெடி பிரதேசத்தில் கண்ணிவெடி அகற்றியதாக NMAC அறிவித்துள்ளது. 2023ஆம் ஆண்டில் NMAC உட்பட மனிதாபிமான கண்ணிவெடி செயற்பாட்டு அரச சார்பற்ற நிறுவனங்களின் கூட்டு முயற்சியினால் சவால்களைப் பொருட்படுத்தாமல் 5.33Km² கண்ணிவெடி பிரதேசத்தில் கண்ணிவெடி அகற்றப்பட்டுள்ளது.

 

2024 மார்ச் மாதத்தில் இருக்கும் வரையில்* இலங்கையின் 25 நிர்வாக மாவட்டங்களில் இடர்மிக்க 11 மாவட்டங்களில் மொத்தமாக 23.4Km² அளவு பாதுகாப்பற்ற பிரதேசங்கள் மீதியிருப்பதாக NMAC மதிப்பிட்டுள்ளது. முல்லைத்தீவு அதிகளவு வெடிப்பொருட்கள் உள்ள மாவட்டமாக இருப்பதோடு, அதைத் தொடர்ந்து மன்னார், வவுனியா, கிளிநொச்சி ஆகிய வமாவட்டங்களும் இருக்கின்றன. இந்தப் பிரதேசங்கள் விடுவிக்கப்பட்டால் பாதுகாப்பான காணிகள், உல்லாச பயணம், விவசாயம், மீன்பிடி, உட்கட்டமைப்பு அபிவிருத்தி மற்றும் கல்வியையும் சுகாதார வசதிகளையும் உள்ளடக்கிய பிரதேசமாகத் திகழும் என எதிர்பார்க்கப்படுகிறது.

*நிறைவு ஆய்வு செயல்முறையின் போது சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இங்கு வழங்கப்பட்ட புள்ளிவிவரங்கள் மாற்றமடையலாம் என்பதை தயவுசெய்து கவனத்தில் கொள்ளவும்.

கண்ணிவெடி செயற்பாட்டாளர்கள் தமது மீள் ஆய்வு நடவடிக்கைகளை 2017ஆம் ஆண்டு பூர்த்தி செய்தனர். அதன் விளைவாக பரந்த அளவிலான பாதுகாப்பான காணிகள் விடுவிக்கப்பட்டதோடு கண்ணிவெடியினால் கறைபடிந்து எஞ்சியிருக்கின்ற பெரும் பகுதிகள் தெளிவாகக் கண்டறியப்பட்டன. 2019ஆம் ஆண்டிலிருந்து வந்த பிரதான பிரச்சினை யாதெனில் முன்னர் கண்டறியப்படாமல் இருந்து கண்ணிவெடியினால் கறைபடிந்த பிரதேசங்கள் எதிர்பாராமல் கண்டறியப்பட்டதோடு, தனிமைப்படுத்தப்பட்ட காடுகள் உட்பட முன்னர் குடியேறி இருக்காத மற்றும் முன்னர் கண்டுபிடிக்கப்படாத கண்ணிவெடிகள் பற்றி சமூக அங்கத்தினர்களால் கண்டறியப்பட்டுள்ளன. இன்னொரு பார்க்கும் கோணம் யாதெனில் சில ஆபத்தான பிரதேசங்கள் IMSMAஇனால் பதிவு செய்யப்பட்டவையுடன் ஒப்பிடுகின்ற போது குறிப்பிடத்தக்களவு பெரிதாக இருந்ததாகும். இது கண்ணிவெடி அகற்றும் செயற்பாட்டாளர்கள் தமது பணிகளை நிறைவு செய்வதற்கு திட்டமிட்டிருந்த காலத்தோடு ஒப்பிடுகின்ற போது குறிப்பிடத்தக்களவு அதிக காலத்தை செலவழிக்க வேண்டியுள்ளது.

 

இந்த நிகழ்ச்சித்திட்டம் 2021ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு முன்னர் கண்டறியப்படாத ஏதேனும் கண்ணிவெடியினால் கறைபடிந்த பிரதேசங்களை அடையாளம் காண்பதற்கு அர்ப்பணிக்கப்பட்ட ஆய்வின் ஊடாக இந்தச் சவால்களைப் பற்றி பேசியது. 2022ஆம் ஆண்டின் இறுதியில் இலங்கையில் மொத்த கண்ணிவெடி பிரதேசம் 15.4Km2 இற்கு சற்று அதிகம் என NMAC அறிவித்தது. எவ்வாறாயினும் 2024 மார்ச் மாதத்தில் இந்த எண்ணிக்கை 23.4Km² வரை அதிகரித்தது. இந்த அதிகரிப்பை தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற தொழில்நுட்பம் சாரா ஆய்வு (NTS) எடுத்துக்காட்டியது.  இந்த ஆய்வு மேலதிக கண்ணிவெடி பிரதேசங்களை அடையாளம் கண்டதை அடுத்து அது தரவுத்தளத்தில் சேர்க்கப்பட்டது.

இலங்கையின் பூர்த்தி செயன்முறையானது 2027 ஆம் ஆண்டின் முடிவளவில் அடையப்படுமென எதிர்பார்க்கப்படுவதோடு ஐக்கிய நாடுகளின் உறுப்புரை 5 இன் கடப்பாடுகளைப் பூர்த்திசெய்வதற்கு வழிவகுக்கும் செயற்பாடுகளையும் நோக்கங்களையும் முன்வைக்கின்றது.

முன்னர் கண்டறியப்படாத ஏதேனும் கண்ணிவெடியினால் கறைபடிந்த பிரதேசங்களை அடையாளம் காண்பதற்கு அர்ப்பணிக்கப்பட்ட தொழில்நுட்பம் சாரா ஆய்வு நடவடிக்கைகளை (NTS) இந்த நடவடிக்கைமுறை சேர்த்துக்கொள்ளுவதோடு, தற்பொழுது நடைபெற்றுகக் கொண்டிருக்கின்ற ஆய்வு மற்றும் பதிவு செய்யப்பட்ட ஆபத்தான பிரதேசங்கள் மற்றும் ஆய்வு பூர்த்தி என்பவற்றையும் சேர்த்துக்கொள்ளுகிறது.

தெளிவான மற்றும் ஒத்திசைவான செயல்முறைகளின் அடிப்படையில், திடமான IM மற்றும் QM நடவடிக்கைமுறைகளினால் பூர்த்திசெய்யும் ஆய்வு நிர்வாக பிரதேசங்களை “பூர்த்தியடைந்தது" என்று அறிவிக்க இலங்கை அரசாங்கத்தை அனுமதிக்கும். இது அனைத்து கண்ணிவெடி பிரதேசங்களையும் அடையாளம் காண்பதற்கும் கண்ணிவெடிகளை அகற்றுவதற்கும் நியாயமான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன என்பதையும் பூர்த்தி ஆவணத்தில் கையொப்பமிடுகின்ற நேரத்தில் நிர்வாக பிரதேசங்களில் கண்ணிவெடிகள் இருக்கின்றன என்பதற்கு மேலும் சாட்சியங்கள் இல்லை என்பதையும் உறுதிப்படுத்தி வெளியிடுவதற்கு இலங்கை அரசாங்கத்திற்கு அனுமதியளிக்கிறது.

ஒரு மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு கிராம அலுவலரும் வெடிபொருட்களினால் கறைபடிந்த பிரதேசங்கள் இல்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும். மாவட்டத்தில் உள்ள எல்லா கிராமங்களும் பூர்த்தியடைந்ததன் பின்னர் மாவட்ட அதிகாரி "கண்ணிவெடி அற்ற” பிரதேசம் என கையொப்பமிடுவார்.

NMAC கிராம உத்தியோகத்தர் பிரிவில் (இலங்கையில் உள்ள மிகச் சிறிய நிர்வாக அலகு) முரண்பாட்டு வரலாற்றையும் EO வெடிபொருட்களால் கறைபடிந்த பிரதேசங்களையும் பகுப்பாய்வு செய்துள்ளது. இது யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட கிராம உத்தியோகத்தர் பிரிவுப் பட்டியலை உருவாக்கியுள்ளதோடு, இங்கு பின்வரும் செயல்முறையைப் அடிப்படையாகக் கொண்டு பூர்த்தி ஆய்வு மேற்கொள்ளப்படும்.
மாகாணங்கள்/மாவட்டங்கள் பூர்த்தி நடவடிக்கையின் விஜயம் செய்ய ஆய்வு போது வேண்டிய கிராம அலுவலர் பிரிவுகள் முரண்பாட்டு செறிவு மற்றும் கண்ணிவெடி பாரிய ஆயதங்களால் கறைபடிந்த EO பிரதேசங்களில் வாழ்வாதாரம்
வட மாகாணம்: யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார்
அனைத்தும்
உயர்
கிழக்கு மாகாணம்: திருகோணமலை, மட்டக்களப்பு, (அம்பாறை உள்ளடங்கவில்லை)
அனைத்து முரண்பாட்டினால் பாதிக்கப்பட்ட கிராம அலுவலர் பிரிவுகள் மற்றும் அவற்றின் அருகில் உள்ள கிராம அலுவலர் பிரிவுகள்
நடுத்தரம்
ஏனைய மாகாணங்கள் மாவட்டங்கள்: அனைத்து மற்றும் புத்தளம், அநுராதபுரம், பொலனறுவை மற்றும் அம்பாறை உட்பட
முரண்பாட்டினால் பாதிக்கப்பட்ட கிராம அலுவலர் பிரிவுகள் மாத்திரம்
குறைந்த நிலை

2022ஆம் ஆண்டில் விருத்தி செய்யப்பட்ட நிறைவு செய்யப்பட்ட ஆய்வு தர செயற்பாட்டு நடவடிக்கைமுறைக்கு (SOP) அமைவாக அனைத்து கண்ணிவெடி செயற்பாட்டாளர்களும் நிறைவு ஆய்வை நடத்துகின்றனர்.

 

2023ஆம் ஆண்டில் ஐந்து கண்ணிவெடி செயற்பாட்டாளர்களின் கூட்டு முயற்சியின் விளைவாக மொத்தமாக 6,130,384.55 சதுர மீற்றர் விடுவிக்கப்பட்டது. (மூலம்: IMSMA)

MAG HALO DASH SHARP SLA HDU
2,491,381m2
2,503,425.05m2
618,397m2
340,364m2
176,817.5m2

Use of Land Released in 2023

(Source: IMSMA)

2023ஆம் ஆண்டில், விடுவிக்கப்பட்ட காணிகளில் குறிப்பிடத்தக்க பகுதி, மொத்த பிரதேசத்தில் 60% எனக் கணிப்பிடப்பட்ட பகுதி, பாதுகாப்பாக நடமாடுவதற்கும், இயற்கை வளங்களைப் பாதுகாப்பதற்கும் அந்தப் பிராந்தியத்தில் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்வதற்கும் அதிக வாய்ப்புகளை உருவாக்கும். விடுவிக்கப்பட்ட காணிகளில் 20% விவசாய அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்டுள்ளதோடு, பிராந்தியத்தில் உணவுப் பாதுகாப்பை மேம்படுத்துவதும் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதும் இதன் குறிக்கோளாகும். அத்துடன் 13%மான காணி மீள் குடியேற்றத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளதோடு பாதுகாப்பான குடியிருப்பு பிரதேசமாகவும் இருக்கும்.

Skip to content