HALO Trust நிறுவனம் 1998ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட ஐக்கிய இராச்சியத்தை (UK) தளமாகக் கொண்ட மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் அமைப்பாகும். இது உலகளாவிய ரீதியில் 24 நாடுகளிலும் பிரதேசங்களிலும் இயங்குகின்றது. இந்த அமைப்பு ஆய்வுகளை நடத்துவதற்கும் கண்ணிவெடி அகற்றுவதற்கும் மற்றும் கண்ணிவெடி ஆபத்து பற்றிய கல்வியை வழங்குவதற்கும் உள்ளூர் பணியாளர்களை பணியில் அமர்த்தியுள்ளது.
இந்த அமைப்பு 2002ஆம் ஆண்டு இலங்கையில் அதன் பணிகளை ஆரம்பித்ததோடு, தற்பொழுது வடமாகாணத்தில் கண்ணிவெடியால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களிலிருந்து 1,100இற்கு மேற்பட்ட பணியாளர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளது. இந்தப் பணியாளர்களில் மூன்றில் ஒரு பங்கினர் பெண்களாவர். அவர்களில் அநேகமானவர்கள் தலைமை வகித்து செயலாற்றுகின்றனர். ஆரம்பத்தில் 2002 மற்றும் 2008ஆம் ஆண்டுக்கு இடையில் அதன் முயற்சி யாழ்ப்பாணத்தின் மீது கவனம் செலுத்துவதாக இருந்தது. 2009ஆம் ஆண்டில் யுத்தம் முடிவடைந்ததை அடுத்து HALO அதன் நடவடிக்கைகளை கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தியது. இந்த விரிவாக்கம் உள்நாட்டில் இடம்பெயர்ந்து மீளக் குடியேறியவர்களுக்கு (IDP) உதவுவதை நோக்கமாகக் கொண்டிருந்தது. மத்திய செயற்பாட்டு தளம் கிளிநொச்சியில் அமைந்துள்ளது.
மேலதிக தகவல்களுக்கு பின்வரும் தொடர்பை கிளிக் செய்யவும்:
சமூக நல்லிணக்கத்திற்கான டெல்வோன் அசிஸ்டென்ஸ் (DASH) என்பது இலங்கையின் இலாப நோக்கற்ற கண்ணிவெடி அகற்றும் அரச சார்பற்ற நிறுவனமாகும். அதன் பணியாளர்கள் மனிதாபிமான கண்ணிவெடி அகற்றல் துறையில் நிபுணத்துவம் வாய்ந்த மற்றும் அனுபவம் வாய்ந்த இலங்கை பிரஜைகளைளாவர். டேனிஷ் கண்ணிவெடி அகற்றும் குழுவின் (DDG) ஆதரவுடன் DASH அதன் செயற்பாடுகளை 2010ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஆரம்பித்தது. தற்பொழுது 400இற்கு மேற்பட்ட பணியாளர்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்தப் பணியாளர்களில் 23% சதவீதமானவர்கள் பெண்களாவர். அவர்களில் அநேகமானவர்கள் தலைமை பதவிகளில் உள்ளனர். இந்த அமைப்பு இலங்கையில் வட மாகாணத்தில் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் இயங்குகின்றது. DASHஇன் தலைமை அலுவலகம் கொழும்பில் அமைந்துள்ளதோடு, அதன் வெளிக்கள அலுவலகம் கிளிநொச்சியில் அமைந்துள்ளது. மேலும் பரந்தன் (கிளிநொச்சி), மாங்குளம் மற்றும் வெலிஓய (முல்லைத்தீவு) ஆகிய மூன்று இடங்களில் முகாம்களை நடத்துகிறது.
ஸ்கெவிட்டா மனிதாபிமான உதவி மற்றும் நிவாரண கருத்திட்டம் (SHARP) இலங்கையின் இரண்டாவது தேசிய கண்ணிவெடி அகற்றும் அரச சார்பற்ற நிறுவனமாகத் திகழ்கிறது. இது ஜப்பான் அரசாங்கத்தின் உதவியுடன் 2016ஆம் ஆண்டு அதன் பணிகளை அரம்பித்தது. முதலில் கிளிநொச்சி மாவட்டத்தில் கண்ணிவெடி அகற்றும் பணிகளில் கவனம் செலுத்தியது. பின்னர் SHARP அதன் முயற்சிகளை முல்லைத்தீவு மாவட்டத்தை உள்ளடக்கி விரிவுபடுத்தியது. SHARP தற்பொழுது 200இற்கு மேற்பட்ட பணியாளர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளது. அதில் 18% சதவீதமானவர்கள் பெண்களாவர், அதன் பிரதிநிதித்துவ அலுவலகம் கொழும்பில் அமைந்துள்ளது. மத்திய செயற்பாட்டு தளம் பளையில் அமைந்துள்ளது.
RONCO ஆலோசனை கூட்டுத்தாபனத்தின் உதவியுடன் இலங்கை இராணுவத்தின் மனிதாபிமான கண்ணிவெடி அகற்றல் பிரிவு (SLA HDU) கண்ணிவெடி அகற்றும் செயற்பாடுகளை 2002ஆம் ஆண்டு யாழ்ப்பாண குடா நாட்டில் ஆரம்பித்து 2007ஆம் ஆண்டு வரை மேற்கொண்டது. அன்று தொடக்கம் இலங்கை இராணுவ பொறியியலாளர்கள் கண்ணிவெடி அகற்றும் செயற்பாடுகளை மேற்பார்வை செய்தனர். தற்பொழுது, இலங்கை இராணுவத்தின் மனிதாபிமான கண்ணிவெடி அகற்றல் பிரிவு (SLA HDU) அரசாங்கத்திற்கு சொந்தமான ஒரே முகவர் நிலையமாக வடக்கு கிழக்கு பிராந்தியங்களில் கண்ணிவெடி அகற்றும் செயற்பாடுகளை, வவுனியாவில் தலைமை நிலையத்தைக் கொண்டு நடாத்திவருகின்றது. நிலத்திற்கு அடியில் புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளை கண்டுபிடிப்பதற்க்கு, கைமூல மற்றும் பொறியியல் கருவிகள் உள்ளடங்கலாக கண்ணிவெடிகளைக் கண்டுபிடிக்கும் மோப்ப நாய்களைப் பயன்படுத்துவது (MDD) வினைத்திறன் மிக்கது என்பது நிருபிக்கப்பட்டுள்ளது. மோப்ப நாய்கள் (MDD) கண்ணிவெடி அகற்றும் செயற்பாடுகளில் தர உறுதிப்பாட்டுக்கும் கண்ணிவெடி புதைக்கப்பட்டுள்ள பிரதேசங்களைக் குறைக்கும் பணிகளிலும் முக்கியமான சேவையாற்றியுள்ளன.
மனிதாபிமான கண்ணிவெடி அகற்றுவதற்கான ஜெனிவா சர்வதேச மையம் (GICHD) நிலக்கண்ணிவெடிகள், கொத்தணி வெடிபொருட்கள் மற்றும் வெடிமருந்து களஞ்சியப்படுத்தல் என்பவற்றால் சமூகத்திற்கு ஏற்படும் ஆபத்தைக் குறைப்பதற்கு செயலாற்றுகின்றது. இந்த மையம் கண்ணிவெடி அகற்றும் துறையின் பங்காகளான தேசிய மற்றும் உள்ளூர் அதிகாரசபைகள், நன்கொடை வழங்குநர்கள், ஐநா சபை, ஏனைய சர்வதேச மற்றும் பிராந்திய அமைப்புகள், அரச சார்பற்ற அமைப்புகள், வர்த்தக கம்பெனிகள் மற்றும் கல்வித்துறை என்பவற்றின் நன்மைக்காக இந்தத் துறையை தொழில் நிபுணத்துவம் கொண்டதாக விருத்தி செய்வதற்கு உதவுகிறது.
இலங்கையில் 2023-2027ஆம் ஆண்டு காலப்பகுதிக்காக தேசிய கண்ணிவெடிகள் பூர்த்தி மூலோபாயத்தின் அபிவிருத்தி அமுலாக்கம் மற்றும் மீளாய்வு என்பவற்றிற்க்கு NMAC இற்கு தொடர்ச்சியாக உதவ GICHD தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளது.
மேலதிக தகவல்களுக்கு பின்வரும் தொடர்பை கிளிக் செய்யவும்: