ஆட்களுக்கெதிரான கண்ணிவெடிகளைப் பயன்படுத்துதல், அவற்றை இருப்பில் வைத்தல், உற்பத்தி செய்தல், வேறு இடங்களுக்கு கொண்டு செல்தல் மற்றும் அவற்றினால் ஏற்படும் அழிவுகள் என்பவற்றைத் தடை செய்யும் சமவாயம் (ஆட்களுக்கெதிரான கண்ணிவெடிகளைத் தடைசெய்யும் சமவாயம், ஒட்டாவா சமவாயம், அல்லது கண்ணிவெடிகளைத் தடைசெய்யும் உடன்படிக்கை என்று குறிக்கப்படும்) ஆட்களுக்கெதிரான நிலக்கண்ணி வெடிகளுடன் சம்பந்தப்பட்ட மனிதாபிமான பிரச்சினைகளை அணுகுவதை குறிக்கும் சர்வதேச சமவாயமாகும். இந்த சமவாயம் கனடாவின் ஒட்டாவா நகரில் 1997ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 18ஆம் திகதி ஏற்றுக்கொள்ளப்பட்டு 1999ஆம் ஆண்டு மார்ச் மாதம் 1ஆம் திகதி செயற்படுத்தப்பட்டது