NATIONAL MINE ACTION CENTRE (NMAC)

தேசிய கண்ணிவெடி செயற்பாட்டு மையம்

5 ஆம் மாடி,செத்சிறிபாய கட்டடம் 1, பத்தரமுல்ல, இலங்கை

தேசிய கண்ணிவெடி செயற்பாட்டு மையம்

இலங்கையின் பூரணப்படுத்தல் பயணத்திற்கு உதவுதல்: GICHD’s செயலமர்வுகள், ஜூன் 2024

கண்ணிவெடி அகற்றல் உபாயமுறையை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் இலங்கைக்கு உதவுவதற்கான எமது தற்போதைய முயற்சிகளின் ஓர் அங்கமாக, மனிதாபிமான ரீதியான கண்ணிவெடி அகற்றல் தொடர்பான ஜெனீவா சர்வதேச நிலையமானது (GICHD) 2024 ஜூனில் மூன்று முக்கிய செயலமர்வுகளை நடாத்தியது:

  1. பூரணப்படுத்தல் ஆய்வு இருப்பு பற்றிய செயலமர்வு, இலங்கையின் வடக்கு மாகாண கிளிநொச்சியில் இடம்பெற்றது. இந்த செயலமர்வானது பூரணப்படுத்தல் ஆய்வு மற்றும் தகவல் முகாமைத்துவ முறைகளுக்கு உதவுதல் ஆகியவற்றை மீளாய்வு செய்வதை மையமாகக் கொண்டு காணப்பட்டது. ஏற்கனவே அறியப்படாத வெடிக்காத கண்ணிவெடி பிரதேசங்கள் பற்றிய தோற்றப்பாடுகளை இந்த செயன்முறை வழங்குவதுடன், இலங்கை எதிர்காலத்தில் தனது கண்ணிவெடி அகற்றல் செயன்முறைகளை மிகவும் துல்லியமாகவும் நிச்சயத் தன்மையுடன் திட்டமிடுவதற்கு இது இயலுமையாக்குகின்றது.
  1. தேசிய கண்ணிவெடி அகற்றுதல் தராதரங்கள் (NMAS) மீளாய்வு – இலங்கை வட மாகாண கிளிநொச்சியில் இடம்பெற்றது. ஓர் கூட்டிணைந்த முயற்சியாக மூன்று முக்கிய NMAS விடயங்களை இச்செயலமர்வு மீளாய்வு செய்தது. அவையாவன: காணி விடுவித்தல், தொழில்நுட்பம் சாராத ஆய்வு, தர முகாமைத்துவம் ஆகியனவாகும். எமது கண்ணிவெடி அகற்றல் தொழில்முறைகளின் சீரான தன்மை, வினைத்திறன், பயனுறுதித் தன்மை ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக இத்தகைய இற்றைப்படுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டன.
  1. பூரணப்படுத்தல் தொடர்பான திட்டமிடல் செயலமர்வு – இலங்கை, மேல் மாகாணம், கொழும்பில் இடம்பெற்றது. GICHD மற்றும் தேசிய கண்ணிவெடி அகற்றுதல் மையம் (NMAC) ஆகியன கண்ணிவெடி அகற்றுதல் தொழிற்பாட்டாளர்களுடன் கூட்டிணைந்து ஆட்களுக்கு எதிரான கண்ணிவெடி அகற்றுதல் தொடர்பான சமவாயத்தின் ஐந்தாம் உறுப்புரை தொடர்பிலான இலங்கையின் பூரணப்படுத்தல் செயன்முறைகள் தொடர்பில் செயற்படுவதற்கான திட்டமிடல் செயலமர்வொன்றினை நடத்தியது. 2023 மற்றும் 2024 காலப் பகுதியில் ஏற்கனவே அறியப்படாத பாதுகாப்பற்ற பிரதேசங்கள்; கண்டறியப்பட்டதன் காரணமாக, இலங்கையில் கண்டறியப்படாத பிரதேசங்களின் அடித்தளம் அதிகரித்தது. எனவே பூரணப்படுத்தல் தொடர்பான காலப் பகுதியை இது பாதித்தது. மாறுபட்ட நிதியிடல் மட்டங்கள் தொடர்பான மூன்று வாய்ப்புக்கள்  இந்த செயலமர்வின் பொழுது அறியப்பட்டன. ஆவையாவன:  எஞ்சியிருக்கின்ற வெடிக்காத பொருட்கள் பற்றிய பரிசீலனைகளை மேற்கொள்ள அதிகரித்த, நிலைபேறான அல்லது குறைவான நிதியிடல் பற்றி அறியப்பட்டது. இலங்கை அரசாங்கம், சர்வதேச நன்கொடையாளர்கள், கண்ணிவெடி அகற்றல் பங்கீட்டுப்பாட்டாளர்கள் ஆகியோரிடத்தில் வெளிப்படையான, சான்றாதாரத்தின் அடிப்படையில் கலந்துரையாடல்களை மேம்படுத்துவது இதன் நோக்கமாகும். கண்ணிவெடிகள் அற்ற இலங்கை தொடர்பில் தொடர்ச்சியான முன்னேற்றங்களை உறுதிப்படுத்துவதற்கு பூரணத்துவம்மிக்க வள அணி திரட்டல் உபாயமுறைக்கு இட்டுச் செல்வதற்கு இங்கு கற்றுக் கொண்ட விடயங்கள் உதவும்.

 

இந்த செயற்பாடுகளை சாத்தியமாக்குவதற்கு தாராளமாக உதவிய அரசியல் மற்றும் இராணுவ அலுவல்கள் தொடர்பான அரச பணியகத்திற்கான US திணைக்களம் மற்றும் ஜேர்மன் பெடரல் வெளிநாட்டு அலுவலகம் (GFFO) ஆகியவற்றிற்கு GICHD மற்றும் NMAC ஆகியன தனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றது. இந்த செயலமர்விற்கான, அதன் வெற்றிக்கான காத்திரமான பங்களிப்புகளை வழங்கிய MAG, HALO Trust, DASH, SHARP, இலங்கை இராணுவத்தின் மனிதாபிமான கண்ணிவெடி அகற்றல் பிரிவூ (HDU) உள்ளடங்கலாக சகல பங்குபற்றுநர்களுக்கும் எமது உளமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.

Skip to content