NATIONAL MINE ACTION CENTRE (NMAC)

தேசிய கண்ணிவெடி செயற்பாட்டு மையம்

5 ஆம் மாடி,செத்சிறிபாய கட்டடம் 1, பத்தரமுல்ல, இலங்கை

தேசிய கண்ணிவெடி செயற்பாட்டு மையம்

IMSMA முக்கிய நடைமுறைப்படுத்தல், ஜூலை 2024

IMSMA Core, ஆனது புவியியல் தகவல் முறை மென்பொருளை உள்ளடக்கிய முக்கிய முறையாகும். இது இலங்கை உள்ளடங்கலாக தேசிய கண்ணிவெடி அகற்றல் நிகழ்ச்சித்திட்டத்தின் விசேட தொழிற்பாட்டு மற்றும் அறிக்கையிடல் தேவைகளை நிறைவேற்றுவதற்காக உருவாக்கப்பட்ட நெகிழ்ச்சித்தன்மைமிக்க கருவிகளாகும்.

2024 ஜூலையில், NMAC மற்றும் கண்ணிவெடி அகற்றல் தொழிற்பாட்டாளர்கள் ஆகியோருடன் கூட்டிணைந்து IMSMA முக்கிய பங்கீட்டாளர் செயலமர்வொன்றினை GICHD தகவல் முகாமைத்துவ பிரிவு ஏற்பாடு செய்தது. புதிய முறையினுள் முழுமையாக ஒருங்கிணைக்கக்கூடிய மேலதிக செயன்முறைகளை இற்றைப்படுத்துவதை மையமாகக் கொண்டு இந்த செயலமர்வு காணப்பட்டது. இந்த நிலைமாற்றமானது நம்பகத் தகுந்த மற்றும் அணுகக்கூடிய தகவல்கள் கிடைப்பதை உறுதி செய்வதுடன் தற்போது நடைபெறுகின்ற பூரணப்படுத்தல் செயன்முறை மற்றும் ஆட்களுக்கு எதிரான கண்ணிவெடி தடை சட்ட சமவாயத்தின் கீழ் இலங்கைக்கான அகற்றுதல் கடப்பாடுகளை பூரணப்படுத்தியதன் பின்னரான எஞ்சிய இடர்களை முகாமைத்துவம் செய்வதுடன் தொடர்புடையதாக காணப்படுகின்றது (APMBC).

இந்த செயற்பாடுகளுக்கு உதவியமைக்காக அரசியல், இராணுவ அலுவல்கள் தொடர்பான தேசிய பணியக US திணைக்களத்திற்கு (PM/WRA) எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

Skip to content