NATIONAL MINE ACTION CENTRE (NMAC)

தேசிய கண்ணிவெடி செயற்பாட்டு மையம்

5 ஆம் மாடி,செத்சிறிபாய கட்டடம் 1, பத்தரமுல்ல, இலங்கை

தேசிய கண்ணிவெடி செயற்பாட்டு மையம்

எங்கள் செயல்பாடுகள்

இயக்கபடிநிலை 1 தலையீடுகள்

எமது நான்கு கண்ணிவெடி செயற்பாட்டாளர்கள் (MAG, HALO, DASH, SHARP) அவரவர்களுடைய நன்கொடை வழங்கும் நிறுவனங்களின் உதவியுடன் ஊழியர் நிலைமாறல் நடவடிக்கைகளை முன்னெடுகின்றனர். அவர்களுடைய அமைப்புக்குள் ஒரு அர்ப்பணிப்புள்ள அணி இந்த நடவடிககைகளை மேற்பார்வை செய்கின்றது. கண்ணிவெடிகள் அகற்றும் செயற்பாடுகள் முழு அளவில் தொடர்கின்றபோது, இயக்கபடிநிலை 1 இன் தலையீடுகள் தற்போது. இடம்பெற்று வருகின்றன. பாலின உணர்திறன் அணுகுமுறையுடன் கூடிய ஆண், பெண் கண்ணிவெடி அகற்றுகின்றவர்களின் பல்வகை வருமானத்தை மேம்படுத்துவதற்கு, அவர்கள் தொழிலில் ஈடுபட்டிருக்கின்றபோது தலையீடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பிரதான தலையீடுகளில் பின்வருவன உள்ளடங்குகின்றன:

நிதிசார் அறிவு பயிற்சிகள் கண்ணிவெடி அகற்றும் பணியாளர்கள் அவர்களுடைய மாத சம்பளத்தை உரிய முறையில் பயன்படுத்தி, தனிப்பட்ட நிதிசார் முகாமைத்துவத்தை மேம்படுத்துவதனால் கிடைக்கக்கூடிய தெரிவுகளை அடிப்படையயாகக் கொண்டு நிதிசார் தீர்மானங்களை மேற்கொள்ளுவதற்கும் மற்றும் எதிர்காலத்திற்காகத் திட்டமிடுவதற்கும் உதவுகிறது. இந்தப் பயிற்சி சேமிப்பு. கடன் மற்றும் கடன் முகாமைத்துவம், வரவு செலவைத் திட்டமிடுதல், காப்புறுதி மற்றும் நிதிசார் சேவைகளை வழங்குகின்றவர்களை அணுகுதல் போன்ற தலைப்புகளை உள்ளடக்குகிறது. தேவைப்படுபவர்களுக்கு தனிப்பட்ட நிதி ஆலோசனைகளும் வழங்கப்படுகிறது.

சேவை வழங்குபவர் : IDEAS ஆலோசனை நிறுவனம்

அடைவுகள்: 2023 டிசம்பர் மாதமளவில், இந்தத் தலையீட்டிலிருந்து 1,630 ஊழியர்கள் பயன் பெற்றுள்ளனர்.

தமிழ் எழுத்தறிவு வகுப்புகள் தமிழ் எழுத்தறிவு குறைவாக உள்ள பணியாளர்களுக்கு (அவர்களின் தாய்மொழி தமிழ்) அவர்களின் எழுதும் வாசிக்கும் அறிவை வளர்ப்பதற்கும் அவர்களின் அன்றாட வாழ்க்கையை நல்லமுறையில் நடத்துவதற்கும், தற்போது நிறுவனத்தினுள் பதவி உயர்வுகளைப் பெறுவதற்கு உதவுவதுடன், கண்ணிவெடி அகற்றும் நிகழ்ச்சித்திட்டம் முடிவடைந்ததன் பின்னர் தொழில் பெறுவதற்கான சந்தர்ப்பத்தை விரிவுபடுத்துவதற்கும் உதவுகின்றன.

சேவை வழங்குபவர் : கிளிநொச்சி மற்றும் வவுனியா வலய கல்வி அலுவலங்களிலின் வள பயிற்றுனர்கள்

அடைவுகள்: 2023 டிசம்பர் மாதமளவில், MAG மற்றும் HALO அமைப்புகளிலிருந்து 81 ஊழியர்கள் பயன் பெற்றுள்ளனர்.

சிங்கள பேச்சுப் பயிற்சியானது தமிழ் பேசும் பணியாளர்களுக்கு இந்த நாட்டின் முதன்மை மொழியான சிங்களத்தில் தேர்ச்சி பெறுவதற்கும், வினைத்திறன் மிக்க வகையில் அவர்களின் தொடர்பாடல் திறனை மேம்படுத்துவதற்கும் உதவுகிறது. இந்தத் தேர்ச்சி அவர்களின் நம்பிக்கையை உயர்த்துவதோடு, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மட்டுமல்லாது வெளி மாகாணங்களிலும் வியாபார வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கும் தொழில் வாய்ப்புகளைப் பெறுவதற்கும் உதவுகிறது. ஆரம்பத்திலேயே இப் பயிற்சியை ஆரம்பிப்பது முக்கியமானதாகும். ஏனெனில் மொழியில் தேர்ச்சி அடைவதற்கு காலம் தேவைப்படும்.

சேவை வழங்குபவர் : த லெஜன்ட் கல்வி நிறுவகம்

அடைவுகள்: 2023 டிசம்பர் மாதமளவில், MAG அமைப்பிலிருந்து 268 ஊழியர்கள் இந்தத் தலையீட்டினால் பயன் பெற்றுள்ளனர்.

ஆங்கில மொழி திறன் அவர்களுடைய தற்போதைய வேலைத்தளத்திலும் எதிர்கால தொழில்களின் போதும் வினைத்திறன் மிக்க தொடர்பாடலுக்கும் உதவுகிறது. உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தொழில் வாய்ப்புகளை மேம்படுத்துவதற்கும் உதவும். ஆரம்பத்திலேயே இப் பயிற்சியை ஆரம்பிப்பது முக்கியமானதாகும் ஏனெனில் மொழியில் தேர்ச்சி அடைவதற்கு காலம் தேவைப்படும்.

சேவை வழங்குபவர் : வவுனியா பல்கலைக்கழகம் (MAG); அவர்களுடைய சர்வதேச ஊழியர்கள் (HALO); DMI (SHARP)

அடைவுகள்: 2023 டிசம்பர் மாதமளவில், 209 MAG, HALO மற்றும் SHARP ஊழியர்கள் இந்தத் தலையீட்டினால் பயன் பெற்றுள்ளனர்.

கண்ணிவெடி அகற்றுபவர்களுக்கு இரண்டாவது வருமான தோற்றுவாயாக வர்த்தக பண்ணைத் தொழிலில் அல்லது சிறு வியாபாரங்களில் ஈடுபடுவதற்கு சந்தர்ப்பத்தைக் கண்டறிவதை நோக்கமாகக் கொண்டு பணியாட் தொகுதி அங்கத்தினர்கள் வதிகின்ற மாவட்டங்களில் விவசாய திணைக்களமும் கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களமும் வழங்குகின்ற சேவைகளை பற்றி மேலோட்டமான விபரங்களை இந்த திசைமுகப்படுத்தல் நிகழ்ச்சித்திட்டம் வழங்குகின்றது.

சேவை வழங்குபவர் : விவசாய திணைக்களம் மற்றும் கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களம்

அடைவுகள்: 2023 டிசம்பர் மாதமளவில், 583 MAG மற்றும் SHARP ஊழியர்கள் இந்தத் தலையீட்டினால் பயன் பெற்றுள்ளனர்.

இந்த ICT திறன் பயிற்சியில் ஊழியர்கள் தொழில்சார் மற்றும் தனிப்பட்ட சூழலில் வினைத்திறன் மிக்க வகையில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கு, MS Office பயன்பாடுகள் (Word, Excel, PowerPoint, Outlook) தொடர்பாடல் வழிமுறைகள் (Zoom) மற்றும் (Microsoft), அடிப்படை கணினி பழுதுபார்த்தல் மற்றும் பராமரித்தல் என்பவற்றை உள்ளடக்கப்பட்டுள்ளது.

சேவை வழங்குபவர் : CINEC பல்கலைக்கழகம்

அடைவுகள்: 2023 டிசம்பர் மாதமளவில், 75 MAG ஊழியர்கள் இந்தத் தலையீட்டினால் பயன் பெற்றுள்ளனர்.

இந்த பாதுகாப்பான நடமாட்டத்திற்க்கு உதவும் நிகழ்ச்சித்திட்டம், குறிப்பாக பெண்கள் மற்றும் விசேட தேவையுடைய ஊழியர்களுக்கு அவர்களின் பாதுகாப்பையும் நடமாட்டத்தை மேம்படுத்துவதற்கு வாகனம் செலுத்தும் அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக்கொள்ளுவதற்கு உதவுகிறது. தனியார் போக்குவரத்துக்கு அவர்களை வலுவூட்டுவதன் மூலம் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக்கொள்ளவும் சுயேட்சையாக செயற்படுவதை அதிகரிப்பதும் இதன் நோக்கமாகும்.

சேவை வழங்குபவர் : மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம்

அடைவுகள்: 2023 டிசம்பர் மாதமளவில், 51 MAG மற்றும் SHARP ஊழியர்கள் இந்தத் தலையீட்டினால் பயன் பெற்றுள்ளனர்.

இந்த வலுவூட்டல் நிகழ்ச்சித்திட்டம் முக்கியமாக கண்ணிவெடி அகற்றும் பெண் ஊழியர்கள் ஆண் ஊழியர்களை விட வேலை அநுபவம் குறைந்தவர்களாக காணப்படுவதால் பெண் ஊழியர்களுக்கு இடையில் நம்பிக்கையைக் கட்டியெழுப்புதல், செயல்தூண்டல், நேர முகாமைத்துவம், உணர்வுபூர்மான அறிவு மற்றும் மனஅழுத்த முகாமைத்துவம் போன்ற அத்தியாவசியமான மென் திறன்களை அபிவிருத்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்தகைய திறன்கள் பெண் கண்ணிவெடி அகற்றும் ஊழியர்களுக்கு ஆண் தலைமைத்துவம் மேலோங்கி இருக்கின்ற தொழிலில் தோன்றுகின்ற தனித்துவமான சவால்களை கையாள உதவி செய்துகின்றது.

சேவை வழங்குபவர்: வவுனியா பல்கலைக்கழகம்

அடைவுகள்: 2023 டிசம்பர் மாதமளவில், 23 MAG பெண் கண்ணிவெடி அகற்றும் பணியாளர்கள் இந்தத் தலையீட்டினால் பயன் பெற்றுள்ளனர்.

வடக்கு கிழக்கு மாகாணங்களில் கடந்த காலத்தில் நிகழ்ந்த யுத்த சூழலினால் ஏற்பட்ட கடுந்துன்பம் மற்றும் மனக்காயம் என்பவற்றை சரியான முறையில் கையாளவும், நல்வாழ்வு, நிலைமைக்குத் தக்கபடி மாறுதல் மற்றும் கண்ணிவெடி அகற்றும் பணியில் சவால்களை தக்கமுறையில் சமாளிக்கும் வழிமுறைகள் போன்றவற்றை பயில இந்த மனநலம் மற்றும் உளவியல் (MHPSS) தொடர்பான நிகழ்ச்சித்திட்டம் உதவியக்கின்றது.

சேவை வழங்குபவர் : பாதுகாக்கும் திணைக்களம் மற்றும் குடும்ப புனர்வாழ்வு மையம் (MAG); கிளிநொச்சி மருத்துவ சங்கம் (HALO); அரசாங்க ஆலோகர்கள் (SHARP)

அடைவுகள்: 2023 டிசம்பர் மாதமளவில், அனைத்து 800+ MAG ஊழியர்கள், மற்றும் HALOவிலிருந்து 93 ஊழியர்ககளுடன், SHARPயிலிருந்து 202 ஊழியர்கள் இந்தத் தலையீட்டினால் பயன் பெற்றுள்ளனர்.

MAG வவுனியா பல்கலைக்கழகத்தின் உதவியுடன் 39 ஊழியர்களுக்கு தலைமைத்துவ பயிற்சியை அளித்துள்ளது. SHARP தொழில் திணைக்களத்துடன் கூட்டாக இணைந்து 35 ஊழியர்களுக்கு தொழில் ஒழுங்குவிதிகள் பற்றிய விழிப்புணர்வூட்டும் நிகழ்ச்சித்திட்டத்தை ஒழுங்கு செய்தது. அத்துடன் சுகாதார அமைச்சின் உதவியுடன் 156 பணியாட் தொகுதி அங்கத்தினர்களுக்கு தொற்றும் மற்றும் தொற்றா நோய்கள் பற்றிய இன்னுமொரு விழிப்புணர்வூட்டும் நிகழ்ச்சித்திட்டத்தை ஒழுங்கு செய்தது.

இயக்கபடிநிலை 2 தலையீடுகள்

MAG, கிவிகாஹா (Kiwikaha) கற்கை நிலையத்தின் தொழில்நுட்ப உதவியுடன் 12 வார விரைவான பயிற்சித் திட்டம் ஒன்று (NVQ மட்டம் 3 அனுமதி கோரப்பட்டுள்ளது) அபிவிருத்தி செய்யப்பட்டது. வர்ணம் தீட்டுதல் (கட்டிடம்), ஓடு பதித்தல், நிர்மாண பணிகளுக்கான இயந்திரங்களை இயக்குதல் ஆகிய நிர்மாண பணிகளுடன் தொடர்புடைய உயர் கிராக்கியுள்ள மூன்று தொழில்களுக்கு, கண்ணிவெடி அகற்றும் ஊழியர்கள் நிலைமாறுவதற்க்கு இந்த பயிற்சித் திட்டம் உதவி செய்யும்.

 

இந்த முன்னெடுப்பு மூன்றாம் நிலை கல்வி, தொழிற் கல்வி ஆணைக்குழு (TVEC), தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழில் பயிற்சி அதிகாரசபை (NAITA), வாழ்க்கைத் தொழிற்பயிற்சி அதிகாரசபை (VTA), நிர்மாண கைத்தொழில் அபிவிருத்தி அதிகாரசபை (CIDA) என்பவை உள்ளிட்ட பிரதான அரசாங்க பங்கீடுபாட்டாளர்கள் மற்றும் இரண்டு பாரிய நிர்மாண கம்பெனிகளான MAGA மற்றும் Sanken/STAM, என்பவற்றுடன் கூட்டிணைந்து விருத்தி செய்யப்பட்டது.

 

இந்த முன்னோடி “வேகமாக – வழிகாட்டும்” பயிற்சித் திட்டம் முதலில் கண்ணிவெடி அகற்றும் பணியாளர்களின் தற்போதைய திறன்களை மதிப்பீடு செய்வதையும், பின்னர் தேவையான தொழில்நுட்ப திறன்களைப் பெறுவதற்கு இலக்கு பயிற்சியை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த அணுகுமுறை மிகவும் வடிவமைக்கப்பட்ட மற்றும் விரைவான பாடநெறி செயல்முறையை உறுதி செய்கிறது. தற்பொழுது இருக்கின்ற நீண்டகாலம் எடுக்கும் மற்றும் மீள் பயிற்சிக்கு போதியளவு ஊக்குவிப்பு கிடைக்காத பாரம்பரிய வாழ்க்கைத் தொழிற்பயிற்சி பாடநெறிகளைப் பின்பற்றும்படி ஊழியர்களை வேண்டுவதைவிட இந்த முன்னோடி பயிற்சித் திட்டத்தை ஊழியர்களுக்கு அறிமுகப்படுட்துவது நல்லது.

துறைசார் ஒருங்கிணைப்பு மற்றும் கூட்டிணைவு (MAG இன் வாழ்வாதார ஆலோசகரால் ஒழுங்குபடுத்தப்பட்டது)

Skip to content