முற்று முழுதாக கண்ணிவெடி அகற்றும் பணிகள் நிறைவடையும் வரை, ஊழியர் நிலைமாறல் நடவடிக்கைமுறை மூன்று பிரதான இயக்கபடிநிலைகளைச் சுற்றி கட்டமைக்கப்பட்டுள்ளது.
வேலை நேரத்தின் பின்னர் மற்றும் /அல்லது மழைக் காலங்களில் அல்லது கண்ணிவெடி அகற்றும் வேலைகளைச் செய்ய முடியாத நேரங்களில், கண்ணிவெடி அகற்றும் செயற்பாடுகளோடு இணைந்ததாக இயக்கபடிநிலை 1இன் தலையீடுகள் அமுல்படுத்தப்படுகின்றன. இயக்கபடிநிலை 1 இரண்டு: நோக்கங்களைக் கொண்டுள்ளது: (1) ஊழியர்களின் தொழில் திறன் இடைவெளிகளுக்குப் பாலமாக இருப்பதன் மூலம் அவர்களின் தயார் நிலையை மேம்படுத்துதல் மற்றம் (2) அவர்களின் நன்னெறிகளையும் செயலூக்கத்தையும் உயர்த்தி வைத்து பணிவிலகல் நடைவடிக்கைமுறையை ஆரம்பிக்கும் வரை அவர்களைத் தக்கவைத்துக்கொள்ள முடியும்.
ஊழியர்களின் தேவைகளுக்கு ஏற்ப அவர்களின் திறன்களை மேம்படுத்துகின்ற அதேவேளையில், குறைந்த எண்ணிக்கையிலான ஊழியர்களைக் கொண்ட பணிநீக்கத் திட்டம் ஒன்று, அவர்களின் தொழில்நுட்ப மற்றும் தொழில்முறை திறன்களை மேம்படுத்தும் நோக்கத்துடன் கண்ணிவெடி அகற்றும் பணிகள் நிறைவடைய வேண்டிய காலக்கெடுவுக்கு முன்னதாக செயல்படுத்தப்படும் (கட்டம் 2)
கிராக்கியான மாற்று தொழில்களுக்கு அவர்களின் வினைத்திறன் மிக்க நிலைமாறலுக்கு அவர்களின் தொழில்நுட்ப மற்றும்/அல்லது வாழ்க்கைத் தொழில் திறன்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு தடை ஒழிப்பு பூர்த்திக்காக ((இயக்கபடிநிலை 2) முடிவு நாளைக் குறிப்பதற்கு முன்னர் சிறு தொகை ஊழியர்களைக் கொண்டு தேவைக்கு அதிகமாக இருக்கும் ஊழியர்களுடன் நிகழ்ச்சித்திட்டமொன்று நடத்தப்படுகிறது.
இயக்கபடிநிலை 2இல் கற்றுக் கொண்ட பாடங்களை கூட்டிணைத்து இயக்கபடிநிலை 3இல் தேவைக்கு அதிகமாக இருக்கும் ஊழியர்கள் பற்றிய நிகழ்ச்சித்திட்டம் உள்ளடக்கப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் (கண்ணிவெடி அகற்றும் தேவைகளை அடிப்படையாகக் கொண்டு) 200 முதல் 300 வரையிலான ஊழியர்கள் பணிபணிநீக்கம் செய்யப்படுவர். சேவை வழங்குநர்கள் மற்றும் பங்காளர்களின் சேவை தொடர்ச்சி தொடர்பான முடிவுகள், முன்னோடித் திட்ட முடிவில் வெளிப்புற தடைகளை (உதா: கிடைக்கும் வரவு செலவு திட்டம், தொழில் சந்தை நிபந்தனைககள், போன்றவை) மதிப்பாய்வு செய்து எடுக்கபடும்.
(1)ஊழியர்கள் மத்தியில் (ஒரே அமைப்புக்குள்ளும் கண்ணிவெடி செயற்பாட்டு துறையிலும்) போட்டி நிலையைத் தவிர்ப்பதற்கு மாற்று பொருளாதார நடவடிக்கைகளுக்கு படிப்படியான மற்றும் நன்றாக இணைப்பாக்கம் செய்யப்பட்ட ஊழியர் படைவிலகல் அத்தியாவசியமாகும். அத்துடன் (2) மிகையாக அணிதிரட்டுவதையும் அதே பங்காளர்கள் மற்றும் சேவை வழங்குபவர்கள் உதவியின் தரத்தை குறைக்கக் கூடிய குறிப்பிட்ட காலவரையறைக்குள் உழியர் நிலைமாறலுக்கு உதவுவதையும் தடுத்தல்.
திசைமுகப்படுத்தலுக்கும் தொழில் வழிகாட்டல் நிகழச்சித்திட்டத்திற்கும் உதவுவதற்கு இயக்கபடிநிலை 2இனை ஆரம்பிப்பதற்கு முன்னர் கிராக்கியுள்ள தொழில்கள், சாத்தியமான பாடநெறிகள் மற்றும் உதவி நடவடிக்கைகள் உட்பட வரைவிலக்கணப்படுத்தப்பட்ட கண்ணிவெடி அகற்றலுக்குப் பிற்பட்ட ஒரு தொகுதி நிலைமாறல் தெரிவுகள் முடிவுறுத்தப்படும். இந்தத் துறையில் உள்ள ஊழியர்களுக்கான நிலைமாறல் நடவடிக்கைமுறைகளை உறுதிப்படுத்தி ஒப்பந்த ரீதியான உடன்படிக்கைகள் தகுந்த சேவை வழங்கபவர்கள் மற்றும் வெளி பங்கிடுபாட்டாளர்கள் இந்த விருப்பத் தெரிவுகளுடன் இணைந்து கொள்வர். அதற்கு மேலதிகமாக, முன்கூட்டியே வரைவிலக்கணப்படுத்தப்பட்ட உதவி வகைகளுக்குள் அடங்காத தனிப்பட்டவர்களுக்கு உதவுவதற்கு பரிந்துரை முறைமையொன்று அமுல்படுத்தப்படும்.
தற்பொழுது, பின்வரும் கிராக்கியுள்ள தொழில்கள் ஒழுங்காக காலத்திருத்தம் செய்யப்பட்ட பட்டியல்களுடன், அடையாளம் காணப்பட்டுள்ளது.
தமது நாடுகளில் கண்ணிவெடி அகற்றுகின்றவர்களுக்காக இதேபோன்ற நிகழ்ச்சித்திட்டங்களை ஆரம்பிப்பதில் ஆர்வம் காட்டுகின்ற ஏனைய நாடுகளின் கண்ணிவெடி செயற்பாட்டாளர்களுக்காக பிரதான படிமுறைகளை, உள்நோக்கங்களை மற்றும் பரிந்துரைகளை வழங்குகின்ற பின்வரும் ஆவணங்களை தயவுசெய்து பதிவிறக்கம் செய்துகொள்ளவும்: